பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 213 விடுகிறேன். நான் சொல்வது ஒருவேளை பொய்யாக இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டாம். இதுவரையில் நடந்த விஷயத்தை நான் எடுத்து உண்மையாகச் சொன்னது போல இனி நடக்கப் போகும் விஷயமும் உண்மையாகவே நடக்கக்கூடியது என்று நீங்கள் நிச்சயமாக நம்புங்கள். இன்று காலையில் உங்களுக்கு வந்த கடிதத்தில் முக்கிய மான இன்னொரு விஷயம் இருந்ததே! அந்தப்படி நடந்து கொண்டீர்களா? அதாவது, அந்தக் கடிதம் வந்தது என்பதையும், நீங்கள் இப்போது இங்கே தனியாக வந்து ஒரு மனிதரோடு பேசப் போகிறீர்கள் என்பதையும், உங்களைத் தவிர, வேறே யாரும் அறிந்து கொள்ளாதபடி நிரம்பவும் எச்சரிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் எழுதி இருந்தாரே. அதுபோல நடந்து கொண்டீர்கள் அல்லவா? அன்னம் :- ஒ! அப்படியே நடந்து கொண்டேன். என்னுடைய சொந்தப் பெண்களுக்குக் கூட இந்த விஷயம் தெரியாது. பரதேசி:- சரி; நல்லது! நான் இப்போது சொல்லப்போகும் செய்தியைக் கேட்டு நீங்கள் திகில் கொண்டு தவிக்க வேண்டாம். ஏனென்றால், உங்களுக்கு இன்று நேரப்போகும் பெருத்த அபாயத்திலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக அந்தச் இன்ஸ்பெக்டர் தக்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். அந்த சம்பந்தமாக நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு வருவதற் காகவே, உங்களை அவர் இங்கேவரச் செய்தார். உங்கள் வீட்டின் அடியில் சுரங்கத்தில் அபரிமிதமான சொத்துக்களை மறைத்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அன்னம்:- (மிகுந்த பிரமிப்பும் திகிலும் அடைந்து) ஆம்: உண்மைதான். நான் சுரங்கத்தில் என் சொத்துக்களை எல்லாம் வைத்திருப்பது என்னைத்தவிர வேறே யாருக்குமே தெரியாதே! அப்படியிருக்க, அது சம் பந்தமாக எனக்கு என்னவிதமான