பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/228

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


214 பூர்ணசந்திரோதயம்-2 அபாயம் நேரப்போகிறது? எத்தனையோ தலைமுறையாக நாங்கள் பாடுபட்டுத் தேடிவைத்துக் காப்பாற்றிவரும் அந்தச் சொத்தை யாராவது அபகரிக்க நினைத்திருக்கிறார்களா? பரதேசி:- ஆம்; இன்று ராத்திரி சரியாகப் பதினைந்து நாழிகைக்கு, உங்களுடைய வீட்டிற்குள் திருடர்கள் புகுந்து உங்களை எல்லாம் கொன்று போட்டுவிட்டு சுரங்கத்திற்குள் நுழைந்து எல்லாப் பொருள்களையும் கொள்ளை அடித்துக் கொண்டுபோக எத்தனித்து இருக்கிறார்கள். அன்னம்:- (கட்டிலடங்காத் திகிலும் நடுக்கமும் அடைந்து கையைப் பிசைந்துகொண்டு) ஐயோ! நாங்கள் என்ன செய்யப் போகிறோம். இந்தப் பயங்கரமான அபாயத்திலிருந்து எப்படித் தப்பிப் பிழைக்கப் போகிறோம். பரதேசி:- அம்மா திருடர்கள் கட்டாயமாக இன்றைய தினம் உங்களுடைய வீட்டுக்குள் வந்துதான் தீருவார்கள். ஆனால், அந்த இன்ஸ்பெக்டருடைய விருப்பப்படியும் புத்திமதிப் படியும் நீங்கள் நடந்துகொண்டால், உங்களுக்கு எவ்விதக் கெடுதலும் நேராது. உங்களுடைய சொத்துகளில் ஒரு துரும் பைக் கூட அந்தத் திருடர் எடுத்துக்கொண்டு போக முடியாது. அன்னம் :- நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரிந்தால், நான் அதுபோலவே நடந்து கொள்ளுகிறேன். பரதேசி:- இந்தத் திருட்டுக்கு மூலாதாரமான உள்ளாள் உங்கள் வீட்டிலேயே இருந்து உங்களுடைய சோற்றையே தின்று வளர்ந்து வருகிறான். அவனைப் போன்ற பரம அயோக்கியன் வேறு எவனுமே இருக்கமாட்டான். அவனுடைய பெயர்கந்தன். அன்னம் :- ஆ என்ன ஆச்சரியம்! எங்கள் வீட்டு வேலைக்காரக் கந்தனா இப்படிப்பட்ட காரியத்தைச் செய்யப்