பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 215 போகிறான் அவன் பரமயோக்கியன் போல நடந்து வருகிறானே! பரதேசி:- அப்படி யோக்கியனாக நடந்தால்தானே அவனைப் பற்றிச் சந்தேகப்படமாட்டீர்கள். இன்றைய தினம் ராத்திரி நடக்கப்போகும் சம்பவங்களிலிருந்து அவன் எப்படிப்பட்ட மனிதன் என்பதை நீங்கள் நேரிலேயே காண்பீர்கள். நீங்கள் இன்று என்ன செய்ய வேண்டுமென்றால், உங்களுடைய சாப்பாட்டை முடித்துக்கொண்டு வேலைக்காரர் களை எல்லாம் வழக்கம்போல வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். அதற்குள் ராத்திரி சுமார் பத்துமணி வரையில் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இன்று திருட்டு நடக்கப்போவதைப் பற்றி உங்களுக்குச் செய்தி கிடைத்திருக்கிறது என்பதையே உங்களுடைய வேலைக்காரர் அறிந்து கொள்ளாதபடி வெகு ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். எல்லோரையும் அனுப்பிய பிறகு, நீங்கள் மெதுவாக எழுந்து வந்து, கொல்லைப் பக்கத்து கதவின் உள்தாழ்ப்பாளை விலக்கி, கதவை வெறுமையாக மூடியபடி வைத்துவிட்டுப் போய் உங்களுடைய பெண்களையும் அழைத்துக் கொண்டு பந்தோபஸ்தான ஒர் அறைக்குள் போய் உள் தாழ்ப்பாளை மாட்டிக்கொண்டு ஜாக்கிரதையாக இருங்கள். அவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது. மற்ற சங்கதிகளை எல்லாம் அந்த இன்ஸ்பெக்டர் பார்த்துக்கொள்வார். இவ்வளவுதான் சங்கதி. இனி நீங்கள் வீட்டுக்குப் போகலாம். அந்த இன்ஸ்பெக்டருடைய ஆளை நீங்கள் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவன் இனி இங்கே வருவானானால், நான் அவனிடம் பேசி, நீங்கள் வந்ததையும், நான் - என்னுடைய திரிகால ஞானத்தினால் எல்லாச் சங்கதிகளையும் உணர்ந்து உங்களுக்குச் சொல்லி, உங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்ததையும் சொல்லி, அவனைத் திருப்பி அனுப்பி விடுகிறேன். நீங்கள் அதிகமாக இவ்விடம் தாமதித்து நின்றால்,