பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பூர்ணசந்திரோதயம்-2 கந்தன் ஒருவேளை உங்களைக் காணுவான்; இங்கே நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்பதைப் பற்றி சந்தேகப்பட்டு எச்சரிக்கை அடைவான். ஆகையால், நீங்கள் உடனே புறப்பட்டுப் போய்விடுங்கள் - என்று சொன்னார். அந்த வரலாற்றைக் கேட்டு மிகுந்த கலக்கமும் கலவரமும் அடைந்த அன்னத்தம் மாள் அந்தப் பரதேசி வெளியிட்ட வரலாற்றைக் கேட்டு இன்ஸ்பெக்டரது ஆளைச் சந்திக்காமல் போய்விட்டால், அதனால் தனக்கு ஏதேனும் துன்பம் நேருமோ என்று கவலை கொண்டாள். ஆனால், அவர் தனக்குக் கடிதம் வந்தது முதல் சகலமான வரலாற்றையும் பொருத்தமாகச் சொன்னதிலிருந்து அவரே இன்ஸ்பெக்டரைச் சேர்ந்த மனிதர் என்ற ஓர் எண்ணம் அவளது மனதில் எழுந்து உறுதிப்பட்டுக் கொண்டிருந்தது. அதிக நேரம் தான் அவ்விடத்தில் நிற்பது தவறு என்பதும் மனதில் பட்டது. ஆகவே, அந்தப் பரதேசியை வணங்கி உத்தரவு பெற்றுக்கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு விரைவாக நடந்து முன் வந்த வழியாகவே நடந்து கால் நாழிகை நேரத்தில் தனது வீட்டை அடைந்தாள். தான் பாழ் மண்டபத்திற்குப் போய்விட்டு வந்த விஷயத்தைக் கந்தன் முதலிய எவரேனும் அறிந்து கொண்டிருப்பார்களோ என்ற சம் சயத்தினால் தூண்டப்பட்ட வளாய் அவர்களோடு சந்தோஷமாகவும் சாதாரணமாகவும் பேசிப் பார்த்துத்தான் அவ்வாறு சம்சயப்பட ஏதுவில்லை என்று நிர்ணயித்துக் கொண்டு ஏதோ காரியத்தைக் கவனிப்பவள்போலத் தனது பொழுதைப் போக்கி வந்தாள். இரவும் வந்தது. மணி, எட்டு, ஒன்பது, பத்தும் ஆயிற்று. எல்லோருக்கும் போஜனம் முடிவடைந்தது. வேலைக்காரர்கள் தத்தம் வீடு போய்ச் சேர்ந்தனர். கந்தன் எப்போதும் வாசல் திண்ணையில் படுத்துக்கொள்வது வழக்கம். ஆதலால், அவன் அங்கே போய்ப் படுத்துக் கொண்டானா