பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/235

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 221 வாசலை அடைந்து திண்ணையின்மேல் ஏறினர். அவ்வாறு அந்த மனிதர்கள் எல்லோரும் பனங்கட்டைகளைப்போலக் கருத்துத் தடித்து நீண்ட பயங்கரமான சரீரங்களை உடையவர் களாகக் காணப்பட்டனர். ஒவ்வொருவனும் இடுப்பில் ஒட்டுச் சடலமணிந்து கையில் பாளை சீவும் நீண்ட பீச்சாங் கத்தி ஒன்றையும், வலுவான பச்சைப் புளியந்தடி ஒன்றையும் வைத்திருந்தான். அவர்களிடையில் மற்றவர்களைக் காட்டிலும் பன்மடங்கு பயங்கரமாகவும் பைசாக கணங்களின் சேனாதிபதி போலவும் காணப்பட்ட கொடிய அரக்கனான கட்டாரித்தேவன், தன்னருகில் வந்து நின்ற கந்தனைப் பார்த்து, என்னடாப்பா கந்தா! அன்னத்தம்மாள் இதைப் பற்றி சந்தேகப்படாமல் இருக்கிறாள் அல்லவா?’ என்று தணிவான குரலில் வினவினான். கந்தன், 'அவள் ஏன் சந்தேகப் படப் போகிறாள்? வழக்கம் போல சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளையும் அவளுடைய மக்களையும் கொன்று போடுவதை விட வாயில் துணியை அடைத்துக் கட்டி ஒர் அறைக்குள் உருட்டிவிட்டு நம்முடைய காரியத்தைச் சுலபத்தில் முடித்துக்கொண்டு போவதே நல்லது. ஏனென்றால், இவர்கள் நம்முடைய மகாராஜாவுக்கு நிரம்பவும் விருப்பமானவர்கள். இவர்களுடைய சொத்துகள் மாத்திரம் களவு போனால், இளவரசர் அதைப் பற்றி அவ்வளவாக விசனப்படாமல் இன்னமும் ஏராளமான பொருளைக் கொடுத்துவிடுவார். இவர்களைக் கொன்றுவிட்டால், அவர் அதைச் சும்மா விடமாட்டார். போலீசாரை எல்லாம் விட்டு, எப்படி யாவது பிரயாசைப்பட்டு நம்மையெல்லாம் பிடித்துவிடச் செய்வார். அதற்கு நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும். நமக்கு வேண்டியது இவர்களுடைய சொத்தே அன்றி இவர்களுடைய உயிரல்ல" என்றான்.