பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


222 பூர்ணசந்திரோதயம்-2 கட்டாரித்தேவன், "சரி; உன் இஷ்டப்படியே செய்வோம். நாம் இவர்களுடைய பணத்தை எடுத்துக் கொண்டுபோக முடியாமல், இவர்கள் ஏதாவது இடைஞ்சல் செய்தால் அப்போது நாம்தாட்சணியம் பாராமல் இவர்களுடைய உயிரை வேண்டுமானாலும் எடுத்துவிடத்தான் நேரும். அது இருக்கட்டும். கதவு உட்புறத்தில் தாளிடப்பட்டிருக்கிறதோ, பூட்டப்பட்டு இருக்கிறதோ? யாராவது ஒருவன் ஒட்டின் மேல் ஏறி உள்ளே இறங்கிவந்து தாழ்ப்பாளைத் திறந்து விடச் செய்யலாமா, அல்லது வெளியிலிருந்தபடியே கன்னக்கோலால் துளை போட்டு தாழ்ப்பாளைத் திறக்கச் செய்யலாமா? என்றான். கந்தன், 'துளைபோட்டுத் திறப்பதே நல்லது. மேலே எறி. உள்ளே வந்து திறந்தால், என்மேல் சந்தேகத்துக்கு இடமும் உண்டாகும். ஒருவேளை நான் உள்ளே இருந்து கதவைத் திறந்துவிட்டிருப்பேனோ என்ற எண்ணம் உண்டானாலும் உண்டாகலாம்” என்றான். - உடனே கட்டாரித்தேவன் தனது கையில் இருந்த கள்ளக் கோலைத் தாழ்ப்பாள் இருந்த இடத்தண்டை கொடுத்து இரண்டு மூன்று திருகுதிருக, அவ்விடத்திலிருந்த சுவர் அப்படியே பிய்த்துக் கொண்டது. அவ்வாறு பெயர்ந்த கட்டியை அவன் எடுத்து மெதுவாகத் தரையில் வைத்துவிட்டு அவ்விடத்தில் உண்டான இடுக்கில் கையை நுழைத்து உள்புறத்தில் இருந்த தாழ்ப்பாளை விலக்கி கதவை மெதுவாகத் திறந்து வைத்தான். பிறகு அவன் அவ்விடத்தில் இருந்த தனது ஆட்களில் சுமார் பதினைந்து பேர்களை ஏவி அந்த வீட்டைச் சுற்றிக் காவல் காத்து நிற்கச் செய்ததன்றி, வீட்டின் உட்புறத்தில் ஆண்பிள்ளைகள் எவரும் இல்லை என்ற நம்பிக்கையினால் துணிவடைந்து, தன்னோடு வேறே நான்கு ஆட்களையும் கந்தனையும் மாத்திரம் அழைத்துக் கொண்டு உள்ளே புகுந்தான். அந்த மாளிகை மூன்று கட்டுகளை