பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


224 பூர்ணசந்திரோதயம்-2 பின்புறமாகத் தரையில் விழ, அவனது முதுகுப் பக்கம் தடாரென தரையில் மொத்துண்டது. உடனே அவ்விடத்தில் பெருத்த குழப்பமும் அமர்க்களமும் ஆயிற்று. கட்டாரித் தேவனோடு வந்திருந்த முரட்டு மனிதர்களும் வந்து போலீசார் மீது பாய, இரண்டு கட்டுகளிலும் நிறைந்திருந்த சுமார் முப்பது போலீஸ் ஜவான்கள் வந்து வளைத்துக்கொண்டு திருடர்களைப் பிடிக்க முயன்றனர். திருடர்கள் ஐவரே இருந்தமையாலும், போலீசார் ஏராளமாக இருந்தமையாலும், அந்தக் கூட்டத்தில் திருடர்கள் நன்றாக அகப்பட்டுக் கொண்டனர். தாங்கள் இனி தப்ப முடியாது என்ற திகில் உண்டாகிவிட்டது. ஆகையால், திருடர்கள் ஐவரும் வீராவேசம் கொண்டு தங்களது உயிரைத் திரணமாக மதித்துத் தங்களது கையிலிருந்த கத்திகளையும், கட்டாரிகளையும் உபயோகித்துப் போலீசாரை அடித்தும், உதைத்தும், குத்தியும், வெட்டியும் ஆர்ப்பரிக்க போலீசாரும் அவர்களுக்குக் கொஞ்சமும் பின்னிடாமல் குத்தியும், அடித்தும், வெட்டியும் சண்டை செய்ய, ஐந்து நிமிஷ நேரத்தில், அந்த யுத்தம் ஒருவாறாக முடிவடைந்தது. கட்டாரித் தேவனோடு வந்த நான்கு திருடர்களும் நன்றாக வெட்டப்பட்டுக் கீழே விழுந்து உயிரை இழந்தனர். கட்டாரித்தேவன் மாத்திரம், இன்ஸ்பெக்டரால் தள்ளிவிடப்பட்டபிறகு போலீசார் ஏராளமாக வந்திருப்பதைக் கண்டு மெதுவாக எப்படியோ தந்திரம் செய்து நழுவித் தப்பித்துக்கொண்டு மூன்றாவது கட்டை நோக்கி ஒடத் தொடங்கினான். அவ்வாறு வீட்டிற்குள் பெருத்த யுத்தம் நடந்தபோது, சடார் படாரென்று கத்திகளும், கட்டாரிகளும் ஒன்றோடொன்று மோதியதால் உண்டான பெருத்த ஓசையைக் கேட்டு, வெளியிலிருந்த திருடர்கள் பயந்து ஒட்டம்பிடித்து விட்டார்கள். கட்டாரித்தேவன் தனது முழுவல்லமையையும் வெளிப்படுத்தி வாயுவேக மனோவேகமாக ஒட ஆரம்பித்து மூன்றாவது கட்டிற்குள் புகுந்து கொல்லைப் பக்கத்தின் வழியாகப் பறக்கிறான். முக்கியமான மனிதன் அவ்வாறு