பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 227 முயற்சியாக ஆற்று வெள்ளத்தில் விழுந்து தப்ப முயல்வதே நல்லதென்று முடிவுகட்டிக் கொண்ட கட்டாரித்தேவன் பொறித்தட்டும் நேரத்தில் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து ஆற்று வெள்ளத்தில் தலை குப்புற வீழ்ந்து முழுகிப் போய்விட்டான். அடுத்த நிமிஷத்தில் ஜவான்கள் ஆற்றுத்தண்ணிரின் ஒரமாக வந்து நின்றனர். அவனைப் பிடிக்க வேண்டுமென்ற ஆவலினால் அவர்களது தேகம் அளவுகடந்து பதறியது. ஆனாலும் மகா பிரமாதமாகக் காணப்பட்ட பயங்கரமான ஆற்று வெள்ளத்தைக் கண்டு தயங்கி நின்றவர்களாய், அவன் எந்தப் பக்கமாக நீந்திப் போகிறானென்று கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த அபரிமிதமான பெரு வெள்ளத்தில் மரங்களும் புதர்களும் கட்டைகளும் குத்துக்குத்தாக மிதந்து போய்க் கொண்டிருந்தன. ஆகையால், அவர்களது பார்வைக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. தண்ணிருக்குள் முழுகிய கட்டாரித்தேவன் அதன் பிறகு வெளியில் கிளம்பிய தாகவும் தெரியவில்லை. ஆகவே, நிரம் பவும் ஆவலோடு அவர்கள் கால் நாழிகை நேரம், அவ்விடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்து, அவன் வெள்ளத்தில் முழுகி இறந்து போய் விட்டான் என்று நிச்சயித்துக் கொண்டவர்களாய் அவ் விடத்தை விட்டுத் திரும்பி அன்னத்தம்மாளினது மாளிகையை நோக்கி விரைவாகச் செல்லலாயினர். அதற்குள் அன்னத்தம்மாள் இருந்த தெரு அல்லோ கல்லோலப் பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டரும் மிகுதி இருந்த ஜவான்களும் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டுப்போன அந்தத் தெருவின் ஜனங்களும், அன்னத்தம்மாள்முதலியோரும் அந்த மாளிகையில் நிறைந்து போயினர். கந்தன் கொள்ளைக் காரர்களைச் சேர்த்துக் கொண்டு அந்த மாளிகைக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றான் என்ற விஷயமும், அதை எப்படியோ முன்னாகவே தெரிந்து கொண்ட