பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 பூர்ணசந்திரோதயம்-2 போலீஸார் ஒளிந்திருந்து அவர்களைச் சின்னாபின்னமாக்கி ஒட்டி விட்டார்கள் என்று விஷயமும் ஒரு நிமிஷத்தில் அந்த ஊர் முழுதும் பரவின. கட்டாரித்தேவன் இன்ஸ்பெக்டரை வெட்ட முயன்று முடிவில் கந்தனையே வெட்டிக் கொன்று விட்டான் என்ற சங்கதியும் தெரிந்தது. அடிபட்டு விழுந்து கிடந்த நான்கு திருடர்களும் இறந்து போய் விட்டார்கள் என்பது சந்தேகமறத் தெரிந்தது. அன்னத்தம்மாளும் ஜனங்களும் வந்து மாண்டுகிடந்தவர்களது ஐந்து பிணங்களை யும் கண்டு திகிலும் நடுக்கமும் அருவருப்பும் கொண்டு பிரமித்து ஸ்தம்பித்து நின்றனர். அந்தச் சமயத்தில் கட்டாரித்தேவனைத் துரத்திக்கொண்டு போன நான்கு ஜவான்களும் திரும்பி அவ்விடத்திற்கு வந்து தங்களது வரலாற்றை இன்ஸ்பெக்டரிடத்தில் எடுத்துக் கூறினர். அதைக் கேட்ட ஜனங்கள் எல்லோரும் அளவற்ற வியப்பும் களிப்பும் அடைந்து கட்டாரித் தேவனும் ஆற்று வெள்ளத்தில் இறந்துபோயிருப்பான் என்றே தீர்மானித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் அந்த ஐந்து பிணங்களையும் ஒரு வண்டியில் வைத்துத் தஞ்சையிலிருந்த வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டுப் பொழுது விடிகிற வரையில் அவ்விடத்திலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு அங்கேயே எச்சரிப்பாக இருந்தார். - 22-வது அதிகாரம் எங்குமில்லா மானக்கேடு சினிக்கிழமை இரவு சுமார் இரண்டு மணி சமயம் இருக்கலாம். அதாவது, அம்மன்பேட்டை அன்னத்தம்மாளினது மாளிகையில் கொள்ளை நடந்த காலத்திற்கு இரண்டு மணி