பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 - பூர்ணசந்திரோதயம்-2 முடியாது. என்னைப் பிடிக்கும்படி வாரண்டு பிறந்திருந்தால், போலீசாருடைய கடமை என்னைப் பிடித்து நியாயாதிபதியின் முன் கொண்டுபோய் விடுவதே யன்றி, மற்ற விசாரணைகளை எல்லாம் நடத்தமாட்டார்கள். விசாரணை காலத்தில்தான் நான் அந்த தஸ்தாவேஜியை நியாயாதி பதியினிடம் காட்டி மன்னிப்புப் பெற வேண்டும். அதுவரையில் நான் சிறைச்சாலை யில் இருந்துதான் தீரவேண்டும். நாளைக்குப் பொழுது விடிந்தவுடன் முக்கியமான ஒருவிஷயத்தைப் பற்றி நான் உன்னிடம் பிரஸ்தாபிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்குக்கூட வசதி இல்லாமல், இந்தப் போலீசார் என்னை இப்போதே பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் போலிருக்கிறதே! என்ன செய்கிறது?" என்று மிகுந்த கவலையோடும் கலக்கத்தோடும் கூறினார். அப்போது வாசல் கதவு முன்னிலும் அதிக வலுவாக இடிக்கப் படவே, தாங்கள் அதிகநேரம் பேசிக்கொண்டிருக்க அது சரியான சந்தர்ப்பம் அல்ல என்று நினைத்த மாசிலாமணிப்பிள்ளை தமது மனைவியைப் பார்த்து, "சரி, கதவை இடிப்பது யாரென்பது நீ கேள். அவர்கள் போலீஸ்காரராக இருந்தால், நீ கதவைத் திறக்காமல் உள்ளே இருந்தபடியே நான் ஊரில் இல்லை என்று சொல்லி அவர்களை அனுப்பிவிடு. அவர்கள் போகாமல் கதவைத் திறக்கும் படி பிடிவாதம் செய்தால், உடனே நான் ஒளிந்துகொள்ளுகிறேன், பிறகு நீ கதவைத் திறக்கலாம்’ என்றார். அதற்கு இணங்கிய அவரது மனைவி பக்கத்தில் இருந்த கதவண்டை போய்நின்று, 'யாரது கதவை இடிக்கிறது?’ என்று ஒன்றையும் அறியாதவள்போல விநயமாகக் கேட்க, வெளியிலி ருந்து உடனே ஒரு மனிதர், 'நான்தான். கதவைத் திறவுங்கள். என்னுடைய குரலிலிருந்து நான் இன்னான் என்பது தெரியவில்லையா?” என்றான்.