பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 233 பெருத்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டன. அதுவுமன்றி அண்ணாசாமிநாயக்கன் என்ற பெயர் கொண்ட எந்த மனிதனும் அதற்குமுன் தங்களது வீட்டிற்கே வந்ததாகவும் தோன்ற வில்லை. ஆகையால், அவள் மறுபடியும் பேசத் தொடங்கி, "யாரது அண்ணாசாமி நாயக்கனா அண்ணாசாமி நாயக்கன் என்ற பெயருள்ள மனிதனே நம்முடைய வீட்டுக்கு வந்தது இல்லையே! அவனுடைய குரல் நமக்குத் தெரிந்த வேறே யாருடைய குரல் போல் அல்லவா இருக்கிறது? உண்மையை நீங்கள் என்னிடம் சொல்லக் கூடாது என்று மறைக்கிறீர்கள்' என்று நயமாக மறுமொழி கூறினாள். அதைக் கேட்ட அந்த மனிதர் சடக்கென்று முன்கோபமும் ஆத்திரமும் அடைந்து, 'எப்போதும் உன்னுடைய மூடபுத்தி உன்னை விட்டுப் போகிறதில்லையே! அண்ணாசாமி நாயக்கன் இன்னான் என்பதை நீ இதற்குள் மறந்துவிட்டால், அதற்கு நான் என்ன செய்வேன் தெரிந்த குரலாக இருக்கிறது என்று நீயே சொல்லுகிறாயே! அப்படியிருக்க, இந்த மனிதன் இன்னான் என்று நீ ஏன் யூகித்துக் கொள்ளக்கூடாது? நான் சொன்னால், அதை நம்ப வேண்டும். நம்பாவிட்டால், சும்மா விழுந்து கிடக்க வேண்டும். ஒரு சங்கதியை நான் உன்னிடம் மறைக்க எண்ணினால், நீ திரும்பத் திரும் பக் கேட்டால் மாத்திரம் நான் உடனே உண்மையைச் சொல்லி விடுவேனா? உனக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத விஷயத்தில் நீ ஏன் தலையிட்டு என்னை உபத்திரவிக்கிறாய். நான் சொல்வதை உண்மையென்று நம்பிப் பேசாமல் படுத்துக்கொள்' என்று கூறியவண்ணம் சயனத்தில் படுத்துக் கொண்டார். அதற்குமேல் ஒன்றும் சொல்லமாட்டாதவளாய், அந்தப் பெண்ணும் சயனித்துக் கொண்டாள். ஆனால், அவளது மனம் திருப்தியும் அமைதியும் அடையவில்லை. தனது புருஷர் சொன்ன வரலாறு பொய்யானது என்றும், ஏதோ ரகசியம்