பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 235 புருஷனும் பெண்ஜாதியும் எழுந்து வழக்கம் போலத் தங்களது காலைக்கடன்களை முடித்துக் கொண்டனர். மாசிலா மணிப்பிள்ளைமேன்மாடத்திற்குப்போய் அங்கேதங்கியிருந்த அன்னாசாமி நாயக்கருக்கு வேண்டிய செளகரியங்களை எல்லாம் செய்துகொடுத்துவிட்டு ஒரு நாழிகை நேரம் கழித்துக் இழே இறங்கிவந்து தமது மனைவி இருந்த இடத்தை அடைந்தார். அவரைக் கண்ட மனைவி மிகவும் நயமாகவும் கொஞ்சலாகவும் பேசத் தொடங்கி, 'அண்ணாசாமி நாயக்கர் ஊருக்குப் போய்விட்டாரா?” என்றாள். மாசிலாமணிப்பிள்ளை, "போகவில்லை. தமாஷாக இங்கே இரண்டு நாளைக்கு இருந்துவிட்டுப் போகவேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆகையால், அவர் இன்றைக்கும் நாளைக்கும் இங்கேதான் இருக்கப் போகிறார்” என்றார். அதைக் கேட்ட மனைவியினது சந்தேகம் முன்னிலும் அதிக பலமடைந்தது. முன்பின்பழக்கமில்லாத யாரோஅன்னியருக்கு அவர் அவ்வளவு உபசாரம் செய்யமாட்டார். ஆதலால் அவர் அவருக்கு நிரம்பவும் அந்தரங்கமான சிநேகிதன் என்றும் அவர் வெளியில் வராமல் மறைந்திருப்பதிலிருந்து அவர் ஏதோ பெருத்த குற்றம் செய்துவிட்டு வந்திருக்க வேண்டுமென்றும் அவள் நிச்சயப்படுத்திக் கொண்டாள். தனது புருஷர் அந்த மனிதனைச் சேர்த்துக் கொண்டு தன் விஷயத்தில் ஏதாவது துன்பம் இழைக்கப் போகிறாரோ என்ற அச்சமே மும்முரமாக எழுந்து வதைத்தது. ஆகையால், அதன் உண்மையான விவரம் இன்னது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க அவளால் இயலவில்லை. ஆகையால், அவள் மறுபடியும் தனது புருஷரைப் பாரத்து, 'நான் எவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டும், நீங்கள் என்னிடம் உண்மையைச்சொல்லமாட்டேன் என்கிறீர்களே. அந்த மனிதர் உண்மையில் யார்? அவர்