பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 21 நிரம்ப அத்தர்களைச் சொரிந்து, அதற்குள் இறங்கி நெடு நேரமிருந்து நீராடித் தனது உடம் பின் மனம் நெடுந்துாரம் கமழும்படி செய்துகொண்டாள்; சிரத்திலிருந்த அற்புத வனப்பு வாய்ந்த அளகபாரத்திற்கும் அதி ரமணியமான கூந்தல் தைலம் தடவித் தாழம்பூ மடல்களோடு சேர்த்து அழகாகப் பின்னித் தொங்க விட்டதன்றி, பின்னலின் உச்சியிலிருந்து நுனிவரையில் ரோஜா மலர்களையும் வைர ஜடை பில்லைகளையும் மாறி வைத்துப் பொருத்தி, அதன் நுனியில் நல்முத்து, நற்பவளம் முதலிய நவரத்ன மணிகளால் ஆன குஞ்சங்களைத் தொங்க விட்டாள். புருவ விற்களில் ஜவ்வாதணிந்து நெற்றியில் கஸ்தூரி திலகம் அணிந்தாள்; இயற்கையிலேயே உலகை எல்லாம் மயக்கும் விஷமம் வாய்ந்த தனது கண்களிரண்டிற்கும் மைதீட்டி அவற்றின் அழகைப் பதினாயிரமடங்கு பெருக்கிக் கொண்டாள்; ஜரிகைப் புட் டாக்கள் நிறைந்த ஊதாநிறப் பனாரீஸ் பட்டாடையை அணிந்து இடையில் வைரங்கள் ஜாஜ்வல்லியமாக நிறைந்திருந்த தங்க ஒட்டியானம் அணிந்து கொண்டாள். விலைமதிக்க அரியதும் கண்ணைக் கவரும் படியான மெருகு வாய்ந்ததும் ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்ததுமான வெல்வெட்டு ரவிக்கை யணிந்து அதன்மேல் நவரத்னம் சகிதமான வங்கிகள் அணிந்து கொண்டாள்; உச்சி முதல் உள்ளங்கால் வரையில் எங்கு பார்த்தாலும் வைர ஆபரணங்களே நிறைந்து நகrத்திரங்கள் கொலுவீற்றி ருந்ததுபோல ஒளிக்கற்றையைக் கொள்ளை கொள்ளையாக அள்ளி வீசிக் கொண்டிருந்தன. பச்சை வெல்வெட்டில் ரோஜாப் புஷ்பங்கள் தைக்கப்பட்ட சிலிப்பர்களைக் காலில் அணிந்து கொண்டாள். ஜாதி மல்லிகை, ரோஜா ஆகிய இரண்டும் சேர்த்துக்கட்டப்பட்ட புஷ்பம் அவளது சிரத்தில் வீற்றிருந்தது. அவ்வாறு சம்பூரணமாகவும் சுத்தமாகவும் அலங்கரித்துக் கொண்ட பூர்ணசந்திரோதயம் நல்ல முதல்தரமான வாசனைத் திரவியங்கள் கலந்த தாம்பூலம் அணிந்தமையால், அவளது அதரங்கள் மாதுளை மலர்போலச் சிவந்து தோன்றின. அவள்