பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 , பூர்ணசந்திரோதயம்-2 குதுரகலமாக இருந்து வந்தோம். அதைவிட்டு இங்கே வந்தபிறகு, பலவிதமான விசனங்களும் கவலைகளும் உண்டாகி நம்முடைய வாழ்க்கையைக் கசப்பாக்கிக் கொண்டே இருக்கின்றன. நேற்று முதல் எனக்கு ஒரு யோசனை தோன்றிக் கொண்டே இருக்கிறது. இந்த ஊரிலிருந்து நான் ஏன் இப்படி அவஸ்தைப்பட வேண்டும். மறுபடியும் மைசூர் ராஜ்ஜியத்துக்குப் போய்விடலாமா என்று எண்ணுகிறேன். மனைவி:- ஆம்; வாஸ்தவந்தான். முகம் அறியாத இந்த ஊரில் வந்திருந்துகொண்டு அல்லும் பகலும் போலீசாருக்குப் பயந்து இப்படி ஒளிந்து கொண்டிருப்பது சகிக்கமுடியாத வேதனையாகத்தான் இருக்கிறது. மாசிலாமணி:- ஆம்; ஆம். அது எனக்கும் நன்றாகத்தான் தெரிகிறது. ஏதோ நான் செய்த குற்றத்துக்காக நான் துன்பம் அனுபவிக்க வேண்டியது நியாயந்தான். என்னால் நீயும் இப்படிப்பட்ட உபத்திரவங்களை அனுபவிப்பதைப் பார்க்க எனக்கே சகிக்கவில்லை. நீயோ மகா அற்புதமான அழகு வாய்ந்தவள்; நல்ல யெளவன பருவத்துப் பெண். நீ நிரம்பவும் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலத்தில் இப்படி ஆறாத் துயரத்துக்கு ஆளாகி வருந்துவது நிரம் பவும் பரிதாபகரமான விஷயமாகத்தான் இருக்கிறது. அப்படியானால், நாம் மறுபடியும் மைசூருக்குப் போய்விடுவோமா? மனைவி:- அதுதான் உத்தமமாகத் தோன்றுகிறது. மாசிலாமணி:- (சிறிது யோசனை செய்கிறவர் போல நடித்து) ஆனால் அதற்கு ஒர் இடைஞ்சல் இருக்கிறது. நம்மிடத்தில் இப்போது பணம் கொஞ்சங்கூடக் கிடையாது. நாம் மைசூருக்குப் போயிருப்பதென்றால், குறைந்தது இரண்டாயிரம் ரூபாயாவது கையில் இருக்க வேண்டும். மனைவி:- ஆம். பணமில்லாமல் என்ன செய்கிறது? பணம் கையில் இல்லாமலா நீங்கள் மைசூருக்குப் போகத்