பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 241. ஆத்திரமாகப் பேசத் தொடங்கி) நீ இப்போது ஊரார்மெச்சும்படி பேசுவது இருக்கட்டும். முதலில் நீ கற்பை இழந்தாயே. அதை நீ உனக்காகச் செய்த காரியமா? எனக்காகச் செய்த காரியமா? அப்போது நீ உன்னுடைய ஆனந்தத்தைக் கருதி அந்தக் காரியம் செய்தாய். இப்போது நாம் இருவரும் அனுபவித்துவரும் கொடுமைகளை விலக்கிக்கொண்டு வேறோர் ஊருக்குப் போய் இருவரும் சந்தோஷமாக இருப்பதைக் கருதி நீ இப்போது அப்படிச் செய்ய ஏன் பின்வாங்குகிறாய்? நாம் பலபல பேசிக் காலதாமதம் செய்வதில் உபயோகம் என்ன? நான் ஒரு முடிவாகச் சொல்லி விடுகிறேன். இந்தத் தடவை மாத்திரம் நீ நம் இருவருடைய பொது நன்மையைக் கருதி இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்துவிடு. இதுதான் கடைசித் தடவை. இதன்பிறகு நீ இப்படிப்பட்டதுறையில் இறங்க, நான் இடங் கொடுக்கவே மாட்டேன். இனி நமக்குள் சண்டை யாவது மனஸ்தாபமாவது உண்டாகவே உண்டாகாது. இந்த விஷயத்தில் நீ என்னுடைய சொல்படி நடக்க மறுத்தால், பிறகு உனக்கும் எனக்கும் மல் யுத்தந்தான். பூமிக்குள் புதைக்கப் பட்டிருக்கும் உன்னுடைய ஆசை நாயகரான ஜெமீந்தாரை வெளியில் கிளப்பி, உனக்கு நல்ல புத்தி கற்பிக்க நேரும். ஜாக்கிரதை என்று நிரம்பவும் அழுத்தமாகவும் கொடுமை யாகவும் பேசினார். அந்த வார்த்தையைக்கேட்ட அவரது மனைவி முற்றிலும் குழம்பிக் கலகலத்துப் போய் அந்த மகா சங்கடமான நிலைமையில் தான் என்ன செய்வது என்பதை உணராதவளாய்த் தத்தளித்துக் குழம்பித் தனது கைகளால் முகத்தைப் புதைத்துக் கொண்டு சோர்ந்து குனிந்து கொண்டாள். அவளது தோற்றம் மகா பரிதாபகரமாகவும் கல்லும் கரைந்து உருகத் தக்கதாகவும் இருந்தது. கண்களிலிருந்து கண்ணிர் வழிந்ததை அவள் அடிக்கடி துடைத்துக்கொண்டாள். அவள் மனம் நொந்து தவிக்கிறாள் என்பதைக் கண்டும் மாசிலா