பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/256

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


242 பூர்ணசந்திரோதயம்-2 மணிப்பிள்ளை அவளது விஷயத்தில் சிறிதும் இரக்கம் என்பதே கொள்ளாமலும், அவளைத் தேற்றும் பொருட்டு ஒர் உபசார வார்த்தைகூடச் சொல்லாமலும் குரூரமான முகத் தோற்றத்தோடு உட்கார்ந்து கொண்டிருந்தார். அவ்வாறு மெளனத்தில் ஐந்து நிமிஷ நேரம் கழித்து மாசிலா மணிப்பிள்ளை அவளைப் பார்த்து, 'அப்புறம் உன்னுடைய முடிவைச் சொல்லிவிடு; எனக்கு நேரமாகிறது. நான் ஒருவருக்குச் செய்தி சொல்லி அனுப்ப வேண்டும்' என்று கண்டித்து அதட்டிப் பேசினார். அதைக்கேட்ட மனைவி நடுநடுங்கி, "நீங்கள் கேட்பதற்கு நான் என்ன பதில் சொல்லப்போகிறேன்? எனக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லாத காரியத்தைச் செய்யும்படி நீங்கள் இப்படிக் கட்டாயப்படுத்தினால், நான் என்ன செய்யக்கூடும் இந்த இரண்டாயிரம் ரூபாயை நான் போய் சம்பாதித்துக் கொண்டு வரவேண்டும் என்கிறீர்களே அப்படிப்பட்ட ஏற்பாட்டை நீங்கள் யாரிடத்திலாவது செய்துகொண்டிருக்கிறீர்களா?* என்றாள். அதைக் கேட்ட மாசிலாமணிப் பிள்ளை ஒருவாறு மகிழ்ச்சியும் அன்பும் கொண்டு, சரி; அப்படிக் கேள். அதுதான் புத்திசாலித்தனம். உன்னிடத்தில் உண்மையை மறைத்தால், காரியம் ஆகப் போகிறதில்லை. நேற்று சாயுங்காலம், என்னை யாரோ கூப்பிடுவதாகத் தோட்டக்காரன் வந்து சொன்னான் அல்லவா! நான் போய் விட்டு வந்து எனக்குத் தெரிந்த ஒரு மனிதர் சும்மா வந்து கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போனதாக நான் சொன்னேன் அல்லவா. அப்போதுதான் இந்த ஏற்பாடு முடிவடைந்தது. தஞ்சாவூர் ராணி வாய்க்கால் சந்தில் ஹேமாபாயி என்ற ஒரு பெரிய மனிஷி இருக்கிறாள். அவள்தான் நேற்று வந்து என்னோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு போனவள். யாரோ ஒரு @ມກົມ vigu இருக்கிறாராம். செல்வத்தில் அவர் குபேரனாம்;