பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 243 யெளவனத்திலும் அழகிலும் மன்மதனாம்; கொடையில் கர்ண மகாராஜனாம். அவர் உன்னை எப்போதோ பார்த்திருக்கிறாராம். அதுமுதல் அவர் பைத்தியம் கொண்டவர் போல் இருக்கி றாராம்; அவர் உன்னோடு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டி ருந்து உன்னை அனுப்புவதற்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னாராம், அதை அவள் என்னிடம் ஒருவிதமாக வெளியிட்டாள். நாளைக்கு ராத்திரி உன்னை அழைத்துக்கொண்டு போக அவள் பெட்டிவண்டி கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். உன்னுடைய குணம் எனக்குத் தெரியும். ஆகையால், நீ அதை மறுக்க மாட்டாய் என்று நம்பி நான் அவளுக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். அவ்வளவுதான் சங்கதி' என்றார். அந்த வரலாற்றைக்கேட்ட அவரது மனைவி கால் நாழிகை நேரம் வரையில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். நிரம்பவும் துஷ்டமனிதரான இப்படிப்பட்ட புருஷரோடுதான் நீடித்து வாழ முடியாது என்ற எண்ணமும், அவன் தன்னை மேன்மேலும் விபசாரத்தில் விடுத்து, தன்னை அடியோடு கெடுத்துவிடுவான் என்ற நினைவும் கொண்ட அந்த மடந்தை ஒருவித முடிவு செய்து கொண்டாள். தன்னிடத்தில் அவ்வளவு அபாரமான மோகம் கொண்டிருக்கும் பிரபு சகலமான அம்சங்களிலும் மேன்மை வாய்ந்தவராக இருந்து, அவர் தன்னை நிரந்தரமாக வைத்துக்கொள்ள எண்ணினால், அவரிடமே தான் இருந்துவிட வேண்டும் என்று அவள் ஒருவாறு தீர்மானித்துக் கொண்டாள். தனது புருஷனுக்கு அவரைக்கொண்டு ஏதேனும் பெருத்த பணத்தொகை கொடுக்கச்செய்து தங்களைத் தொடராமல் ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொள்ளலாம் என்றும் அவள் எண்ணிக் கொண்டவளாய் மேலும் சிறிது நேரம் சிந்தனை செய்கிறவள் போலப் பாசாங்கு செய்து அதன்பிறகு மெதுவாகத் தனது முகத்தை நிமிர்த்தி, சரி; உங்களுடைய பிரியம் எப்படியோ, அப்படியே நடத்துங்கள். நான் எந்த