பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/258

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


244 பூர்ணசந்திரோதயம்-2 விஷயத்திலும் உங்களுக்கு அடங்கி நடக்கக்கடமைப்பட்டவள். ஆகையால், நீங்கள் செய்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கிறேன்' என்றாள். அவளது பணிவையும் சம்மதியையும் கண்டு அளவற்ற மகிழ்ச்சியும், குதூகலமும் அடைந்த மாசிலாமணிப் பிள்ளை அவளை வாய்கொண்டமட்டும் புகழ்ந்து ஸ்தோத்திரம் செய்து கரைகடந்த அன்பைக் காட்டிய உருக்கமான சொற்களை உபயோகித்து அவளை சந்தோஷப்படுத்திக்கொண்டிருந்தார். அதன்பிறகு அன்றைய தினம் வேறு எவ்விதமான விசேஷ சம்பவமும் நடக்கவில்லை. அன்றையதினம் கழிந்தது. மாசிலாமணிப்பிள்ளை அடிக்கடி மேன்மாடத்துக்குப் போய் அண்ணாசாமி நாயக்கனிடம் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கீழே வந்து தமது மனைவியினிடத்தில் அன்னியோன்னியமாகப் பேசி, அவள் மனது கோணும் படியான சொற்களையே உபயோகியாமல் ஒழுங்காக இருந்து வந்தார். அதுபோலவே திங்கட்கிழமை பகற்பொழுதும் கழிந்தது.மாலை நேரம் வந்தது. மாசிலாமணிப்பிள்ளையின் மனையாட்டியான அந்த யெளவனப் பொற்கொடி எழுந்து வாசனை கலந்த தண்ணீரில் நீராடி, உடம்பைத் துடைத்துக்கொண்டு சமையலறைக்குப் போய் மிதமாகச் சிறிதளவு போஜனம் செய்தபிறகு, தனது சயனக்கிரகத்துக்கு வந்து தன்னை முதல்தரமாக அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். தான் அதுவரையில் தன்னை அலங்கரித்துக் கொண்டதை எல்லாம்விட அன்றைய தினம் மகா புதுமையாகவும் அற்புதமாகவும் அவள் தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். அதற்குமுன் ஒருநாள் அவள் இளவரசரை மயக்கி, அவரிடம் ஒரு தஸ்தாவேஜியில் கையெழுத்துப் பெறுவதற்காகப் பார்சீஜாதி ஸ் திரீயாக அலங்கரித்துக் கொண்டதைவிட நூறு மடங்கு விசேஷமாக இப்போது சிங்காரித்துக்கொண்டு எல்லாவற்றிலும் சிறந்த ஆடை ஆபரணங்களைப் பொறுக்கி அணிந்து கொண்டு