பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/259

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 245 ஆன்னப்பேடோ, தோகைமயிலோ, பஞ்சவர்ணக்கிள்ளையோ, கந்தர்வ மடமானோ, ரதிதேவியோ என்று நினைத்து எப்படிப்பட்ட வரும் மயங்கிக் கலங்கி மோகங் கொள்ளுமாறு மனமோகன ரூபிணியாக மாறினாள். இயற்கையிலேயே தந்தத் தகடு போலப் பளபளவென மின்னிய மாக மறுவற்ற அவளது சந்திரவதனம், நிரம்பவும் விஷமம் பொருந்திய மை திட்டப்பட்ட கண்களின் அழகினாலும், ஜவ்வாதுத் திலகம் அணிந்த நெற்றியின் வசீகரத் தன்மையினாலும், கருத்து அடர்ந்த புருவ விற்களின் சொகுசினாலும், தாம்பூலம் அணிந்து சிவந்து கனிந்த அதரங்களின் ஜ்வலிப்பினாலும், முத்துக்களைப் போன்ற பல் வரிசைகளின் கவர்ச்சியினாலும் பதினாயிர மடங்கு சிறந்து, காண்போர் மனதைக் காந்தம் போலக் கவர்ந்து கொள்ளை கொண்டு அடிமையாக்கத்தக்கதாக இருந்தது. வெல்வெட்டும், பட்டும், ஜரிகையுமே மயமாக நிறைந்த ஆடைகளை அவள் வெகு சொகுசாக அணிந்து கொண்டதன்றி, தனது கணவனுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த தனது வைர ஆபரணங்களை எல்லாம் எடுத்து அணிந்துகொண்டு சர்வா பரண பூஷிதையாய் தேஜோ மயமாகவும், இன்ப வடிவாகவும், ஆனந்த நிறைவாகவும் காணப்பட்டு அப்போதே பிரமதேவனால் புதுமையாக சிருஷ்டிக்கப்பட்டு வானுலகத்திலிருந்து தெய்வ விமானத்தின் மூலமாக வந்து கீழே இறங்கிய அணங்குபோல அதி மநோக்கிய இன்பவல்லியாக விளங்கி நின்றாள். மணி ஏழரை ஆயிற்று. வாசலில் ஒரு குதிரைவண்டி வந்து நின்றது. மேன்மாடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மாசிலா மணிப்பிள்ளை உடனே கீழ் இறங்கி வந்து தமது மனைவியிருந்த இடத்தை அடைந்து, அவளைச் சந்தோஷப்படுத்தி அனுப்பி வைக்க வேண்டும் என்னும் கருத்தோடு, அவளது அதி அற்புதமான அழகையும் அலங்காரத்தையும் பற்றி பிரமாதமாகப் புகழ்ந்து பேசினார்; பக்கத்தில் இருந்த ஒரு துப் பட்டியை எடுத்து அவளது முகத்தைத் தவிர மற்ற