பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 பூர்ணசந்திரோதயம்-2 பாகங்களை எல்லாம் மகாராஷ்டிர ஸ்திரீயைப் போல மூடிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு வெளிப்பட்டார். வெளிப்பட்டவர் சந்தடி செய்யாமல் வாசலுக்கு வந்து குதிரை வண்டியில் ஏறி உட்கார்ந்துகொண்டு ஒட்டச் செய்ய, வண்டி அவ்விடத்தை விட்டு மேற்கு நோக்கி ஒட ஆரம்பித்தது. கால்நாழிகை நேரத்தில் அந்த வண்டி இடையில் இருந்த தெருக்களை எல்லாம் கடந்து ஊர்க் கோடியை அடைந்தது. அவ்விடத்தில் சமுத்திரம் என்ற பெயர் கொண்ட பெருத்த ஏரி ஆரம்பமாயிற்று. நான்கு மைல் நீளமுள்ள அந்த ஏரியின் கரையோரமாகச் சென்ற பாட்டையே தஞ்சைக்குப் போகும் வழி. ஆகையால், அவ்விடத்தில் ஒரு பெட்டிவண்டி வந்து ஆயத்தமாக நின்று கொண்டிருந்தது. அதற்குள் ஹேமாபாயி தன்னை துப் பட்டியால் போர்த்திக்கொண்டு மறைவாக உட்கார்ந்திருந்தாள். அவ்விடத்தில் குதிரைவண்டி வந்து நின்றவுடனே, அவள் கீழே இறங்கிக் குதிரை வண்டியின் பக்கமாக வந்து நின்று புன்னகை செய்த முகத்தோடு மாசிலாமணிப் பிள்ளையினது மனைவியைப் பார்த்து மரியாதையாக அவளை உபசரித்துக் கை கொடுத்துக் கீழே இறக்கிவிட்டாள்; அவள் அப்படிச் செய்தது, அந்தப் பெண்ணின் அழகு எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்வதற்காகவே அன்றி வேறல்ல. அவளது உட்கருத்தை எளிதில் யூகித்துக் கொண்ட அந்த யெளவனப் வெண்பாவை கீழே இறங் குகையில் தற்செயலாகத் துப்பட்டி விலகியது போலப் பாசாங்கு செய்து, கண்கொள்ளாவனப்பு வழிந்த தனது அற்புத வடிவத்தை அவளுக்குத் திறந்து காட்டி மறுபடி துப்பட்டியைச் சரிப்படுத்திக் கொண்டாள். அவளது தெய்வீகமான அழகையும் நிகரற்ற சிங்காரத்தை யும் கண்ட ஹேமாபாயி மட்டற்ற மகிழ்ச்சியும் பிரமிப்பும் அடைந்தவளாய் தனது முகத்தை முன்னிலும் அதிகமாக மலர்த்தி வாத்சல்யத்தையும் மரியாதையையும் முன்னிலும்