பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2.47 பன்மடங்கு அதிகமாக வெளிப்படுத்தினாள். தன்னைக் கண்டு அவள் திருப்தி அடைந்து விட்டாள் என்பதை உணர்ந்து கொண்ட அந்த வடிவழகி தான் அன்றையதினம் சந்திக்கப் போகும் பிரபுவினிடம் வெற்றி பெறுவது திண்ணமென எண்ணிக் கொண்டாள். உடனே ஹேமாபாயி அவளை அன்பாக நடத்தி அழைத்துக்கொண்டுபோய்ப் பெட்டிவண்டியில் ஏற்றி உட்கார வைத்தாள். வண்டிக்குள் வைத்திருந்ததும் ஆயிரம் ரூபாய் பெருமானமுள்ள பவுன்கள் அடங்கியதுமான பையை ஹேமாபாயி எடுத்துத் தனக்குப் பக்கத்தில் இருந்த மாசிலாமணிப் பிள்ளையினிடம் கொடுக்க அவர் அதை வாங்கிக் கொண்டு குதிரைவண்டிக்குப் போய் ஏறி உட்கார்ந்து கொண்டு ஊருக்குத் திரும்பிப் போய்விட்டார். உடனே பெட்டிவண்டியும் தஞ்சையை நோக்கி விரைவாக ஒட ஆரம்பித்தது. அந்த யெளவனமடந்தையின்மனதில், அந்தத் தூதுக் கிழவியின் விஷயத்தில் இயற்கையிலேயே ஒருவித அருவருப்புத் தோன்றியது. ஆனாலும், அதை எல்லாம் அடக்கி, சந்தோஷத்தை உண்டாக்கிக்கொண்டு, அவளிடம் சம்பாஷிக்கத் தொடங்குவதற்குக் கொஞ்சநேரம் பிடித்தது. அவர்கள் இருவரும் முதலில் ஏதோ லோகாபிராமமாகப் பொது விஷயங்களைப் பற்றிப் பேசினர். அதிலிருந்து ஹேமாபாயி அந்தப் பெண்ணை அடைய விரும்பும் மனிதரது அழகைப் பற்றியும் செல்வப் பெருக்கைப் பற்றியும் தயாள குணத்தைப் பற்றியும் ஆகாயமட்டும் புகழ்ந்து பேசத் தொடங்கினாள். ஆனால், அவள் அவரது வயது இவ்வளவு என்பதைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. அவருடைய பெயர் என்ன என்பதை அந்த மடந்தை கேட்டதற்கு ஹேமாபாயி தான் அதை மாத்திரம் அப்போது வெளியிடத் தனக்கு உத்தரவில்லை என்று கூறியதன்றி அந்த மனிதர் கலியாணமாகாதவர் ஆதலால், அவளுக்கு விருப்பமானால்