பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/262

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


248 பூர்ணசந்திரோதயம்-2 அவரிடத்தில் எப்போதுமே சிநேகமாக இருக்கலாம் என்று தெரிவித்தாள். அந்தக் குறிப்பை அந்த வடிவழகி கவனமாகக் கேட்டு மனதில் பதியவைத்துக் கொண்டாள். அவளது மனதும் அவ்வித ஏற்பாட்டை ஒருவாறு நாடி இருந்தது. ஆகையால், அவள் அந்தச் செய்தியைக் கேட்டுத் தனக்குள் ஒருவித மகிழ்ச்சி அடைந்தாள். - இரவு சரியாக ஒன்பது மணிக்குப் பெட்டிவண்டி தஞ்சையை அடைந்து ராணிவாய்க்கால் சந்தில் இருந்த ஹேமாபாயினது மாளிகையின் வாசலில் வந்து நின்றது. உடனே பெண்டீர் இருவரும் கீழே இறங்கி உள்ளே சென்றார்கள். ஹேமாபாயி அந்த அழகிய நங்கையை அழைத்துக்கொண்டு மூன்றாவது உப் பரிகைக்குப் போய் ச் சேர்ந்து, அவளது துப்பட்டியை எடுக்கச் செய்த தன்றி, சிறிதளவு சீர்குலைந்திருந்த அவளது ஆடைகளையும் ஆபரணங்களையும் ஒழுங்கு படுத்திவிட்ட பிறகு, மாதுரியமான போஜனம் சிற்றுண்டி முதலியவை ஆயத்தமாக இருந்த ஒர் அறைக்கு அவளை அழைத்துக் கொண்டுபோய், அவளுக்குத் தேவையானவற்றை உட் கொள்ளும் படி உபசரித்தாள். அந்த அணங்கு தனக்குத் தேவையான சிற்சில சிற்றுண்டிகளை சொற்பமாக உண்டபிறகு வாசனைத் தாம்பூலம் அணிந்துகொண்டு சயன் மாளிகைக்குள் நுழைய ஆயத்தமானாள். அவளது அப்போதைய வனப்பும் தோற்றமும் தேவர்களும் பார்த்து ஆனந்தித்துப் பரவசம் அடையத் தக்கனவாக இருந்தமையால், அவளைக் கண்டு மருங்காபுரி ஜெமீந்தார் முற்றிலும் திருப்தியும் ஆனந்தமும் அடைவார் என்று உறுதியாக நினைத்துக்கொண்ட ஹேமாபாயி, பக்கத்திலிருந்த ஒரு சயனக் கிரகத்தை அவளுக்குச் சுட்டிக் காட்டி, 'அம்மா! அதோ தெரிகிறதே, அது மன்மதனுடைய ரதிகேளிவிலாசம் போல அற்புதமாக அலங்கரிக்கப் பட்டிருக்கிறது. அதற்குள் புஷ்ப சயனத்தின்மேல், அந்தப் பிரபு உட்கார்ந்து கொண்டு உன்னுடைய வருகையை