வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 251 வேளைக்கு ஒரு நாழிகை நேரத்துக்கு முன்னிருந்தே அவளது , டம்பு படபடத்துத் துடிக்க ஆரம்பிக்கும். அவள் வெளியில் வந்து ராஜபாட்டையைப் பார்ப்பதும், உள்ளே ஒடித் தனது அலுவல்களைக் கவனிப்பதுமாக நிரம்பவும் பாடுபட்டுப் பொழுதைப் போக்குவாள்.
அவ்வாறு அவள் தனது உயிருக்கு உயிரான காதலனது வருகையை எதிர்பார்த்துப் பார்த்து ஏங்கியிருந்தாள். அப்படி நாட்கள்கழியக் கழிய, அவளது மனம் எண்ணாததை எல்லாம் எண்ணிப் பலவிதமான சந்தேகங்களைக் கொண்டது. அவன் தனது அக்காளைக் கண்டானோ காணவில்லையோ, அல்லது, வழியில் அவனுக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்திருக்குமோ, அல்லது, அவன் தன்னை மறந்து வேறே யாரையாவது புதிய ஒநேகம் பிடித்து அவ்விடத்தில் யாரையாவது கலியாணம் செய்துகொள்ள உத்தேசித்து அதனால் தன்னைப் புறக்கணித்து இருப்பானோ என்று அவள் பலவாறு ஐயமுற்றுத் தணலின் மீது வீழ்ந்த புழுவெனத் துடித்துக்கொண்டிருந்தாள். அந்த பங்களாவில் இருப்பதே அவளுக்கு நரகவேதனையாகத் தோன்றியது. தனது வாழ்க்கையே பாழடைந்து போனதாகத் தோன்றியது. தான் தனது அக்காளுக்கு ஒரு கடிதம் எழுதி, கலியாணசுந்தரம் அவ்விடம் கேஷமமாக வந்து சேர்ந்தானா என்பதைக் கேட்டறிந்து கொள்ளலாமா என்ற எண்ணம் உதித்தது. அவள் போய் விசிப்பலகையின் மேல் உட்கார்ந்து தனது அக்காளுக்குக் கடிதமெழுதத் துவக்கினாள். அது எட்டாவது தினம்; அப்போது காலை பத்துமணிசமயமிருக்கும். அவள் கடிதம் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் வேலைக்காரி முத்தம்மாள் தடதடவென்று உள்ளே ஓடிவந்து, 'அம்மா தஞ்சாவூரிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. இப்போதுதான் தபால்காரன் கொடுத்து விட்டுப் போகிறான்' என்று கூறியவண்ணம் ஒரு கடிதத்தை நீட்ட, அவளது சொல்லைக் கேட்டுத் திடுக்கிட்ட ஷண்முகவடிவு அளவற்ற
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/265
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
