பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/266

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


252 பூர்ணசந்திரோதயம்-2 ஆவலும் மகிழ்ச்சியும் கொண்டவளாய்த் தனது கையில் இருந்த காகிதத்தைக் கீழே போட்டுவிட்டு வேலைக்காரி கொடுத்ததை வாங்கி ஆவலோடு பிரித்துப் படிக்கலானாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது அவசரமாக எழுதப்பட்டது செளபாக்கியவதி ஷண்முகவடிம்மாளுக்கு சர்வாபீஷ்டமும் சர்வ மங்களமும் உண்டாவதாக. இவ்விடத்தில் நானும் உன் அக்காளும் rேமம். அவ்விடத்தில் நீயும் உன் அத்தை முதலியோரும் rேமமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இவ்விடத்துக்கு வந்த மறுதினம் உன் அக்காளுடைய ஜாகைக்கு நான் போயிருந்தேன். அன்றையதினம் அவளை நான் பார்க்க முடியவில்லை. உங்களுக்குப் பணம் கொடுத்து உதவி வந்த சோமசுந்தரம் பிள்ளை நோயாகப் படுத்திருப்பத னாலும், உன் அக்காள் அவரோடு கூட இருந்து அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதனாலும், அவள் என்னை அன்றைய தினம் பார்க்க முடியவில்லை என்று செய்தி சொல்லி அனுப்பினாள். மறுநாள் வரும்படி அவள் சொல்லியிருந்த பிரகாரம் நான்போய் அவளைப் பார்த்தேன். அவளோடு பேசிய விஷயங்களை விரிவாக எழுத இப்போது நேரமில்லை. அவ்விடத்திலிருந்து நான் வந்த காலத்தில் தற்செயலாக நான் ஒரு யெளவனப் பெண்ணைக் கண்டேன். அவள் நிரம்பவும் பரிதாபகரமான நிலைமையிலிருந்தாள். ஆகையால், அவளை நான் உடனே அழைத்துக் கொண்டு போய் என்னுடைய ஜாகையில் வைத்து அவளை என்னுடைய சவரக்ஷணைக்குள் வைத்துக் கொள்ள நேர்ந்தது. அவளுடைய வரலாற்றைக் கேட்டு நான் நிரம்பவும் அபாயகரமான சில சங்கதிகளைத் தெரிந்து கொண்டேன். அந்தச் சம்பந்தமாக நான் அவசரமாய்ச் சில முயற்சிகள் செய்து சில இடங்களுக்குப் போக வேண்டியிருப்பதால், நான் சில மாதகாலம் வரையில் ஊருக்குத் திரும்பிவர முடியாத நிலைமையில் இருக்கிறேன்.