பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 255 அவ்வாறு அன்றையதினம் கழிய மறுநாள் வந்தது. ஆன்முக வடிவு அதிகாலையில் எழுந்து தனது காலைக் கடன்களை முடித்துக்கொண்டு தனது அத்தைக்கு ஆக வேண்டிய பணிவிடைகளைச் செய்து முடித்தாள்; வேலைக்காரியைத் திருவாரூருக்கு அனுப்பி, தான் கலியாண கந்தரத்தின் வீட்டுக்குப் போய்த் திரும்பிவர ஒரு வண்டி அமர்த்திக் கொண்டுவரச் செய்தாள். அவ்வாறு வண்டி வந்தவுடன் வேலைக்காரியைத் தனது அத்தையைப் பார்த்துக் கொண்டிருக்கும் படி பங்களாவில் வைத்துவிட்டுத் தான் மாத்திரம் வண்டியில் ஏறிக்கொண்டு புறப்பட்டாள். வண்டி அரைநாழிகை நேரத்தில் திருவாரூரை அடைந்து கலியான சந்தரத்தின் வீட்டை அடைந்தது. ஷண்முகவடிவு வண்டியை விட்டுக் கீழே இறங்கி வீட்டிற்குள்நுழைந்தாள். இன்னது என்று விவரிக்க முடியாத பல வகையான சஞ்சலங்களினால் அலட்டப்பட்ட மனத்தினளாய் அவள் அந்த வீட்டிற்குள் நுழைய, அந்த ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கு ஒவ்வொரு யுகம் போலத் தோன்றியது. நெஞ்சு திடுக்கு திடுக் கென்று அடித்துக்கொண்டது. அப்படிப்பட்ட மகா சங்கடமான நிலைமையில் அவள் அந்த வீட்டிற்குள் நுழைய, உட்புறத்திலிருந்த வேலைக்காரி அவளது திருஷ்டியில் பட்டாள். ஷண்முகவடிவை அந்த வேலைக்காரி அதற்கு முன் பார்த்திருந்தாள் ஆகையால், அவள் உடனே எதிர்கொண்டோடி வணக்கமாகவும் மரியாதையாகவும் வரவேற்று, 'வாருங்கள் வாருங்கள்' என்று அன்பாக உபசரித்து ஊஞ்சற் பலகையில் உட்காரச் செய்தாள். அவளது இயற்கையான பணிவும் அன்பும் மாறாதிருந்ததைக் கண்ட ஷண்முகவடிவுக்கு முக்கால் பாகமும் உயிர் திரும்பியது. அவளது மனதில் ஒருவித தைரியமும் ஏற்பட்டது. அதற்குள் அந்த வேலைக்காரி ஒர் அறைக்குள்போய் அங்கே இருந்து திரும்பி வர, அவளுக்குப் பின்னால் ஒரு யெளவனப் - பெண்ணும் வந்து சேர்ந்தாள். அந்தப் பெண்ணைப் பார்க்கவே 越.母.犀一17