பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/273

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 259 கொண்டிருந்தன. இந்த உலகமே பாழ்த்துப் போனதாகக் தானப்பட்டது. இருந்தாலும், நான் என் மனவேதனையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இந்த ஊரில் என்னுடைய சொந்த மனிதர் சிலரைப் பார்த்து அவரிடம் ஆகவேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டேன். அதன்பிறகு நான் புறப்பட்டு உன்னுடைய அக்காள் நமக்கு எழுதித் தெரிவித்திருந்த புதிய விலாசத்துக்குப் போனேன். ஆனால், அப்போது சோமசந்தரம் பிள்ளை என்ற உங்களுடைய போஷகர் கடுமையான வியாதியாகப் படுத்திருப்பதாகவும், கமலம் அவருக்குரிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருப்ப தாகவும், அதனால் அப்போது அவள் வந்து சாவகாசமாகப் பேச நேரமில்லை என்றும், தயை செய்து மறுநாள் வரவேண்டும் என்றும், கமலம் செய்தி சொல்லி அனுப்பினாள். நான் உடனே அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு என்னுடைய ஜாகைக்கு வந்துவிட்டேன். மறுநாள் அவள் குறித்த நேரத்துக்கு மறுபடியும் நான் கமலத்தின் ஜாகைக்குப் போனேன். அவள் என்னுடைய வருகையை எதிர்பார்த்திருந்த தாகவும் தெரிந்தது. நான் அவளைக் காணவே, அவள் நிரம்பவும் அன்பாகவும் மரியாதையாகவும் என்னை வரவேற்று எனக்கு ஆசனம் கொடுத்து உபசரித்ததன்றி, உன் rேமத்தைப் பற்றியும், அத்தை வேலைக்காரி முதலியோருடைய rேமத்தைப் பற்றியும் என்னுடைய rேமத்தைப்பற்றியும் ஆயிரம் கேள்விகள் கேட்டு, நான் உன்னை அந்தப் போலிச் சாமியாரிடத்திலிருந்து விடுவித்த வரலாற்றை எல்லாம் மறுபடியும் ஒருதரம் நான் சொல்லக் கேட்டாள். அவள் ஒரு கோடீசுவரனுடைய வயிற்றில் பிறந்து, எப்போதும் பெருஞ் செல்வத்திலிருந்து வளர்ந்தவள் போல மகா உன்னதமாகவும் மிருதுவாகவும் இருந்ததன்றி, மிகுந்த நாணம், அடக்கம், பயபக்தி முதலிய நற்குணங்களுக்கே இருப்பிட மாகவும் இருந்ததைக் காண, என் மனம் கட்டுக்கடங்காமல் ஆனந்தபரவசம் அடைந்தது. உன்னை நேரில் பார்த்தால் என்