பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பூர்ணசந்திரோதயம்-2 மறுத்துப் பேசுவது சரியல்ல என்று நினைத்து, அவளுடைய பிரியப்படியே செய்வதாகச் சொன்னேன். அதற்குமேலும் நான் பேசத் தொடங்கினேன். உங்களிடத்தில் அவ்வளவு வாஞ்சை வைத்துள்ளவர்களான அந்த சோமசுந்தரம் பிள்ளை அசெளக்கியமாக இருந்தார். ஆகையால், அவரை நான் ஒரு தரம் பார்க்க வேண்டுமென்ற ஒர் ஆசை என் மனசில் உண்டாயிற்று. நான் அதை உன் அக்காளிடம் வெளியிட்டேன். அவள் உடனே, "வேறே யாரும் அவருக்குமுன் வரவாவது பேசவாவது கூடாது என்று வைத்திய ருடைய உத்தரவும் ஆகியிருக்கிறது. முக்கியமாக அந்தக் காரணத்தினாலேதான் இவர்கள் என்னை விடாமல் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று மிகுந்த கிலேசத்தோடு சொன்னாள். அதற்கு மேல் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசாமல் நான் விட்டுவிட்டேன். அதன்பிறகு நாங்கள் அரைமணி நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்தோம். அவளோடு எவ்வளவு நேரம் பேசினாலும் அது தெவிட்டாத இன்பமாகத் தோன்றியது. பொழுது போவதே தெரியாமல் இருந்தது. உன்னைப் போலவே உன் அக்காளும் உத்தம குணங்களும் நன்னடத்தையும் வாய்ந்தவளென்ற அபிப் பிராயமே என் மனசில் கடைசிவரையில் மாறாமல் இருந்தது. அவள் நோயாளியிடம் போகவேண்டி இருக்கும் என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டு நான் என்னுடைய சம்பாஷணையை அவ்வளவோடு முடித்துக் கொண்டு அவளிடம் செலவு பெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அவள் சில வைர ஆபரணங்களை என்னிடம் கொடுத்து அவைகளை உன்னிடம் சேர்த்துவிடும் படி சொல்லி என்னை அனுப்பி வைத்தாள். அவளால் கொடுக்கப்பட்ட ஆபரணங்களை வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்டு அவ்விடத்தை விட்டு நான் இறங்கி இருந்த ஜாகைக்குப் போனேன். நான் போனவழியில் சில வித்வான்களால் மாதுரியமான ஒரு பாட்டுக் கச்சேரி