பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பூர்ணசந்திரோதயம்-2 அப்படிப்பட்ட துர்பலமான நிலைமையில் அவளை நான் நடத்தி அழைத்துக்கொண்டு போவது முற்றிலும் அசாத்தியமான காரியமாகத் தோன்றியது. அந்த ஆபத்துச் சமயத்தில் லஜ்ஜைப்பட்டு விலகி நிற்பது சரியல்ல என்று நினைத்து, நான் உடனே முனைந்து அந்தப் பெண்ணைத் தூக்கி என் மார்பின்மேல் வைத்துத் தோளில் சாத்திக்கொண்டு விசையாக நடக்கலானேன். அந்தப்பெண், காம்பு ஒடிபட்டு வளைந்து தொங்கும் தாமரைப் புஷ்பம்போல, என் உடம்பில் கை கால்கள் தலை முதலியவைகளைத் தொங்கவிட்டு மூர்ச்சித்துக் கிடக்க, நான் ஒட்டமாக ஒடி வடவாற்றை அடைந்தேன். அவ்விடத்தில், அவளை வைத்து அவளுக்குத் தண்ணிர் கொடுத்துப் பருகச் செய்தால், அவளுக்குப் பிரக்ஞை சொற்பமாகத் திரும்பிவிடும் ஆகையால், அதற்குமேல் அவள், நான் அவளைத் தூக்கிக் கொண்டு போவதற்கு இணங்கவும் மாட்டாள்; தானும் நடந்து வருவதும் கடினமாக இருக்கும் ஆகையால், அவளை ஆற்றங்கரையில் வைக்காமல் ஒரே அடியாக மேலும் நடந்து இன்னொரு ஐந்து நிமிஷ நேரத்தில் என்னுடைய ஜாகைக்கே போய் விட்டால், அவ்விடத்தில் அவளுக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்து, அவளுடைய பசிதாகங்களையும் களைப்பையும் விலக்கி, செளக்கியமாகப் படுக்க வைக்கலாம் என்று நினைத்து அவளைத் துக்கியபடி விசையாக நடந்து அதிசீக்கிரத்தில் என்னுடைய ஜாகைக்குப்போய்ச் சேர்ந்தேன். அவ்விடத்தில் என்னுடைய வேலைக்காரி எனக்காக நல்ல ஆகாரம் தயாரித்து சித்தமாக வைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண்ணை நான் வீட்டுக்குள் கொண்டுபோய் ஒரு படுக்கையில் சுகமாகப் படுக்க வைத்ததன்றி, என்னுடைய வேலைக்காரியை அழைத்து விஷயத்தை இரண்டொரு வார்த்தையில் அவளிடம் சொல்ல, அவள் உடனே பதறிப்போய் குளிர்ந்த ஜலம் கொணர்ந்து அந்தப்பெண்ணின் முகத்தில் தடவி வாயிலும்