பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 267 வார்த்து, விசிறியால் வீசி, அவளது மூர்ச்சையைத் தெளிவித்து, கடச்சுட நல்ல மாதுரியமான ஆகாரம் கொணர்ந்து பரிமாறி சாப்பிடச்செய்து சுகமான படுக்கையில் அவளைப் படுக்க வைத்தாள். அந்த இரவு முழுதும் அந்தப் பெண் கடுமையான துயிலில் ஆழ்ந்து நன்றாகத் தூங்கி மறுநாள் காலையில் களை தெளிந்து சந்தோஷமாக எழுந்தாள். அந்த இரவு முழுதும் நானும் என் வேலைக்காரியும் தூங்காமல் அவளையே கவனித்த வண்ணம் இருந்தோம். அந்தப்பெண் ஏழ்மை நிலைமையில் இருந்ததாகத் தோன்றவில்லை. அப்படிப்பட்ட பணக்கார வீட்டுப் பெண், எந்த ஊரிலிருந்து ஏன் அப்படித் தனிமையில் வந்திருப்பாள் என்று யூகித்து யூகித்துப் பலவாறு எண்ணமிட்டு, எதையும் நிச்சயிக்கமாட்டாமல் சங்கடப்பட்டுக் கொண்டி ருந்தேன். மறுநாள் பொழுது விடிந்தவுடனே, அந்தப் பெண்ணுக்குச்சிற்றுண்டி முதலியவைகள் கொடுத்து உபசரிக்கச் செய்தேன். என்னுடைய வேலைக்காரி அவளை நிரம்பவும் பட்சமாகவும் அன்பாகவும் நடத்தி, அவளுக்கு வேண்டிய செளகரியமெல்லாம் செய்து கொடுத்தாள். அந்தப்பெண்ணின் தேகபாதைகளெல்லாம் சுத்தமாகத் தீர்ந்து போயிற்று. அதனாலும், நாங்கள் அவளிடத்தில் காட்டிய அன்பையும் பிரியத்தையும் கண்டும், அவள் நிரம் பவும் மகிழ்ச்சி அடைந்து, நன்றியறிதல் காட்டினதன்றி, என்னுடைய வேலைக்காரியின் இடத்தில் கேட்டு என்னுடைய வரலாற்றை உணர்ந்து கொண்டாள். அவள் யார் என்பதையும், அவள் தன்னுடைய வீட்டை விட்டுத் தனியாக ஏன் வந்தாள் என்பதையும் அறிந்து கொள்ள நான் நிரம்பவும் ஆவல் கொண்டு அவளுடைய வரலாற்றைச் சொல்லும் படி நான் அவளிடம் நயமாகக் கேட்க, அவள் உடனே ஒருவித லஜ்ஜை அடைந்தவளாய்க் கொஞ்சம் தயங்கியபிறகு என்னைப் பார்த்து, 'ஐயா தாங்கள் இன்னார் என்பதையும், தங்களுடைய குணவிசேஷங்களையும் நான் தங்களுடைய வேலைக்கார