பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 269 உதவி செய்வதைப் பற்றியாவது, உன்னை என் வீட்டில் சேர்த்துக் கொண்டதைப் பற்றியாவது, நான் கொஞ்சமும் விசனப்பட மாட்டேன் என்பதை நீ உறுதியாக நம்பலாம். உன்னுடைய வரலாற்றினால், நீ அன்னிய மனிதரால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறாய் என்பது தெரியவருமானால், இப்போது நாங்கள் உன் விஷயத்தில் காட்டும் அன்பையும் பட்சத்தையும் விட இன்னம் பத்து பங்கு அதிகமாக நாங்கள் உன்விஷயத்தில் காட்டி உன்னைக் கடைசிவரையில் காப்பாற்றுவோம் என்பதையும் நீ நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம்' என்றேன். உடனே அந்தப் பெண் சிறிது நேரம் தயங்கியபின் தனது வரலாற்றை எடுத்துக் கூறத் தொடங்கி, 'ஐயா என்னுடைய சொந்த ஊர் அம்மன்பேட்டை. அந்த ஊரில் கூத்தாடிச்சிகள் என்று ஒரு ஜாதியார் ஏராளமாக இருப்பது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். நானும் அந்த ஜாதியைச் சேர்ந்தவள்தான். என்தாயாருடைய பெயர் அன்னத்தம்மாள் என்பது. அந்த ஊரில் உள்ள கூத்தாடிச்சிகள் எல்லோரிலும், நாங்களே அதிக பணக்காரர்கள். அந்த ஊரிலுள்ள கூத்தாடிச்சிகள் எல்லோருக்குள்ளும் என் தாயார் ஒரு மகாராணி போன்ற அதிகாரமும், செல் வாக்கும் உடையவள். இந்த ஊர் மகாராஜாவினுடைய புத்திரரும் வேறு சில பெரிய ஜெமீந்தார்களுமே எங்களுக்குச் சிநேகிதமான மனிதர்கள். என்னோடு கூடப் பிறந்தவர்கள் எல்லோரும் பெண்களே. என்னைத் தவிர இன்னம் நாலு பெண்கள் இருந்தார்கள். எல்லோரிலும் கடைசிப் பெண்ணான செல்லம் என்பவள் சில தினங்களுக்கு முன்பு விஷஜுரம் கண்டு திடீரென்று இறந்து போய் விட்டாள். இப்போது நாங்கள் நாலுபேர்தான் உயிரோடு இருக்கிறவர்கள். நான் மூன்றாவது பெண், என்னை சிவபாக்கியமென்று கூப்பிடுவார்கள். எங்களுடைய தாய் எங்களையெல்லாம் பொதுவான கல்வியில் கொஞ்சம் பயிற்றியிருப்பதோடு சங்கீத வித்தையிலும் நன்றாகத்