பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பூர்ணசந்திரோதயம்-2 தேற்றியிருக்கிறாள். ஆனால், நான் மற்றவர்களை எல்லாம் விட நம்முடைய நீதி நூல்களையும் புண்ணிய சரித்திரங்களையும் அதிகமாகப் படித்துக்கொண்டேன். ஆகையால், எந்த விஷயத்திலும், அக்கிரமமாகவும் அநீதியாகவும் நடந்து கொள்வதென்றால் அது எனக்கு எப்போதும் பிடிக்கிறதில்லை. மற்ற மூவர்களும் அப்படியல்ல. எங்கள்தாயார்எதைச் செய்யச் சொல்லுகிறார்களோ, அதை மற்றவர்கள் உடனே செய்து விடுவார்கள். நான் மாத்திரம் அப்படிச் செய்கிறதே இல்லை. அம்மாள் செய்யச் சொல்லும் விஷயம் பிறருக்குக் கெடுதல் உண்டாக்கக் கூடியதாக இருந்தால், அப்படிச் செய்யக் கூடாது. என்று நான் நியாயம் எடுத்துச் சொல்வது வழக்கம், அதனால், என் தாய்க்கும் என்னோடு கூடப் பிறந்தவர்களுக்கும் என்னிடத்தில் ஒருவித அதிருப்தி இருந்து வந்தது. எப்போதும் அவர்கள் ஐவரும் ஒரு கட்சி; நான் மாத்திரம் தனியான கட்சி. இந்த நிலைமையில் அவர்கள் சென்ற ஒரு மாச காலமாக எனக்குத் தெரியாதபடி தங்களுக்குள்ளாகவே கூடிக்கூடிப் பேசி ஏதோ ஒரு பெருத்த சதியாலோசனை செய்து வந்தார்கள் போலிருக்கிறது. அந்தச் சதியோலோசனை இன்னது என்பது எனக்குச் சில தினங்களுக்கு முன்னேதான் தெரியவந்தது; ஆகா! அதை நான் என்னவென்று வெளியிடுவேன்! எங்களுக்காவது வேறே எவருக்காவது ஒரு தீங்கையும் செய்தறியாத ஒர் உத்தம ஸ்திரீயை இவர்கள் அநியாயமாகக் கெடுத்து அந்த அம்மாள் தன் புருஷனோடு வாழமுடியாமல் செய்து விட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த உத்தம ஸ்திரீசாதாரணமானஏழை மனிஷியல்ல; நம்முடைய தேசத்துப் பட்ட மகிஷி ஆகக்கூடிய மகோன்னதமான நிலைமையிலுள்ள ஒரு ராஜஸ்திரீ அந்த வரலாற்றை நான் இன்னும் விரிவாகச் சொல்லுகிறேன். நம்முடைய ராஜ்யத்தின் இளவரசர் ஏராளமான ஆசை நாயகிகளை வைத்துக்கொண்டிருந்தாலும், அவர் சாஸ்திரப்படி கலியாணம் செய்துகொண்ட பட்டமகிஷி பூனாதேசத்து