பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


272 பூர்ணசந்திரோதயம்-2 வைத்திருக்கிறாளாம். அவளை நம் இளவரசருக்குக் கலியாணமே செய்துவைத்துவிட்டு அவள் மூலமாக ஒரு பெரிய ஜெமீன் சமஸ்தானத்தையும் கோடிக்கணக்கான பொருளையும் சம்பாதித்துவிடவேண்டுமென்ற உறுதி செய்து கொண்டிருக்கிறாளாம். அவளுக்கும் எங்கள் அம்மாளுக்கும் நிரம் பவும் சிநேகமுண்டு. அவள் எங்கள் அம்மாளிடம் வந்து தனது ரகசியங்களை எல்லாம் சொல்ல, இருவரும் கலந்து ஒரு பெரிய சதியாலோசனை செய்தார்கள். நான் அவர்களுடைய இஷடப்படி செய்ய சுலபத்தில் இனங்கமாட்டேன் என்பது தெரியும். ஆகையால், என்னிடம் எந்தச் சங்கதியையும் தெரிவிக்காமல், என் சகோதரிகள் நால் வரையும் பூனா தேசத்துக்கு அனுப்புவது என்றும் அவர்கள் அங்கே போய் மகாயோக்கியர்கள் போல நடித்து, லலிதகுமாரி தேவிக்கு விபாசாரதோஷம் கற்பித்து அதை இளவரசர் நம்பும்படி மெய்ப்பிக்கத்தக்க சில சாட்சியங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் தீர்மானம் செய்து கொண்டார்கள். அந்த மகா பயங்கரமான சதியாலோசனையில் எங்கள் தாயாரும் கலந்துகொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. போன வருஷத்தில் தீபாவளிப் பண்டிகை யன்று, மற்ற எல்லோரையும் போல, எங்கள் தாயாரும் லலிதாகுமாரி தேவியைப் பார்த்து சன்மானம் வாங்கப் போன காலத்தில், இளவரசி எங்கள் தாயாருக்குப் பேட்டி கொடுக்க மறுத்து விட்டாளாம். அந்த ஆத்திரம் மனசிலிருந்து வந்ததால், அவளுக்கு ஏதேனும் தீங்கு செய்ய வேண்டும் என்பது எங்கள் அம்மாளுடைய எண்ணம். அதுவும் அன்றி, இளவரசர் லலிதாகுமாரி தேவியை விலக்கிவிட்டு, அம்மணி பாயியினால் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பெண்ணைப் பட்டமகிஷியாக்கிக் கொண்டவுடனே, அவளுடைய சிபார்சைக் கொண்டு, தாங்கள் இருவரும் அம்மன்பேட்டை என்ற கிராமத்தை எங்கள் அம்மாள்பேரில் சர்வமானியமாக எழுதி வைத்துவிடச் செய்வதாக அந்த