பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/288

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


274 பூர்ணசந்திரோதயம்-2 தோன்றியது. அப்படிச்செய்தால், அதனால் என் தாயாருக்கும் சகோதரிகளுக்கும் பெருத்த ராஜதண்டனை ஏதாவது ஏற்பட்டு விடும் என்ற பயமும் இரக்கமும் உண்டாகி, அப்படிச் செய்வது சரியல்ல என்று தடுத்துவிட்டன. ஆகையால், நான் எப்படி நடந்துகொள்வது என்ற யோசனையிலேயே நான் என் முழு மனசையும் செலுத்தி யிருந்ததன்றி, என் தாயார் சந்தேகப்படாமல் இருக்கும்படி, அவளுடைய பிரியப்படி நடந்து கொள்வதாக நான் ஒப்புக் கொண்டேன். என்னுடைய சம்மதியைக் கேட்ட என் தாயார் நிரம் பவும் சந்தோஷம் அடைந்தது அன்றி, எங்கள் நால்வரையும் பூனாவுக்கு அனுப்பி வைப்பதற்காக சகலமான முஸ்தீபுகளையும் தயாரித்தாள். பெரிய ராணியிடத்தில் கடிதம், பணம், ஆடை ஆபரணங்கள் முதலியவைகளையும் என் தாயார் வாங்கிக் கொண்டு நேற்றைக்கு முந்திய நாளைக்கு முந்திய நாள் விடிய ஜாமத்துக்கு எங்களை அவசியம் அனுப்பி விடுவதாகச் சொல்லிவிட்டு அதை எங்களிடம் தெரிவித்தாள். எங்களுக்காக அரண்மனையிலிருந்து இரட்டைக் குதிரைகள் பூட்டிய பெட்டி வண்டி ஒன்றும், எங்களுக்கு வேண்டிய சாப்பாட்டு சாமான்கள் பாத்திரங்கள் முதலியவற்றை எடுத்துவர இரண்டு மாட்டு வண்டிகளும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டன. அந்த வண்டிகளோடு நாங்கள் பிரயாணம் செய்து செஞ்சிக்கோட்டை வரையில் போகிறது என்றும், அவ்விடத்து மகாராஜன் இந்த ஊர்ப் பெரிய ராணிக்கு நெருங்கிய பந்து வாகையால் அவரிடம் ஒரு கடிதம் கொடுத்து, அங்கிருந்து வேறு வண்டிகள் பெற்றுக் கொண்டு வடக்கே போகிறதென்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சகலமான ஏற்பாடுகளும் முடிந்து போனதைக் கான்ன, என் மனம் பதறியது. ஹிருதயம் திடுக்கு திடுக்கென்று அடித்துக்கொண்டது. நான் நெருப்புத் தணலின் மேல் இருப்பவள் போலத் தவித்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னுடைய சகோதரிகள் பிரயாணம் போவதைப் பற்றிக் கட்டிலடங்காக் குதுகலமும் மன வெழுச்சியும்