பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 275 அடைந்து வெகுநேரம் வரையில் எங்கள் தாயாரோடு சந்தோஷமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்து கடைசியில் அலுத்துப் போய்த் துரங்க ஆரம்பித்தார்கள். நான் மாத்திரம் விழித்துக் கொண்டே இருந்து ராத்திரி இரண்டு மணிசமயத்தில் படுக்கையை விட்டு மெதுவாக எழுந்து கொல்லைப் பக்கத்துக் கதவைத் திறந்து கொண்டு ஓசை செய்யாமல் வெளியில் போய் ஒட்டமாக ஒடினேன். அன்றையதினம் பகலில் நான் என் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவர்கள் செய்ய நினைத்திருக்கும் படுமோசத்தில் சம்பந்தப்பட எனக்கு இஷ்டமில்லை யாகையால், நான் பூனாவுக்குப் போக மாட்டே னென்றும், அவர்களுடைய வீட்டைவிட்டுப் போகிற தாகவும், அவர்களுடைய துர் எண்ணத்தை மாற்றி லலிதகுமாரி தேவியிடத்தில் இரக்கத்தையும் ஜீவகாருண்யத்தையும் உண்டாக்க வேண்டும் என்று நான் ஈசுவரனை வேண்டிக் கொள்வதாகவும், நான் அந்தக் கடிதத்தில் எழுதினேன். அதுவுமன்றி, நான் அவர்களுடைய வஞ்சகத்தை இளவரசரிடம் வெளியிட்டு ஒரு வேளை அவர்களைக் காட்டிகொடுத்துவிடப் போகிறேன் என்ற கவலை அவர்களுக்கு வேண்டாம் என்றும் நான் அந்தக் கடிதத்தில் எழுதி அதை என் படுக்கையின் மேல் வைத்துவிட்டு முன் சொன்னபடி ஒசை செய்யாமல் வெளிப்பட்டு ஒட்டமாக ஒடினேன். அந்த அம்மன்பேட்டையி லிருந்து போகும் ராஜபாட்டையின் வழியாகப் போனால், என் தாயார் ஆள்களை அனுப்பித் தேடச் செய்வது நிச்சயம். ஆகையால், அவர்கள் என்னை எப்படியும் பிடித்துக் கொள்வார்கள் என்று நினைத்து நான் காடுகளிலும் மேடு களிலும் வயல்களிலும் விழுந்து தாறுமாறாக ஓடினேன். நான் எங்கே போகிறது என்பதையும், என்ன செய்கிறது என்பதையும் அறியாமல், திக்குத் திசை உணராமல் பைத்தியம் பிடித்தவள் போல, அந்த இருளில் ஒடிக்கொண்டே இருந்தேன். அந்த ராத்திரி முழுதும் நான் அலைந்தது சுமார் பத்துமைல் தூரம் இருக்கும். பொழுது விடிந்தபொழுது, விஸ்தாரமாக