பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25 தெரிந்தது. ஆனால், அந்தத் தாதிகள் அவளை அப்புறம் இப்புறம் அழைத்துப்போகாமல் படிக்கட்டிற்கு நேர் எதிரில் மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு கதவைத் திறந்து, 'அம்மணி இந்த ஹாலுக்குள் இளவரசர் இருக்கிறார். உள்ளே நுழைந்து வலதுபக்கம் திரும்பிப்போங்கள்' என்று அடக்க ஒடுக்க மாகவும் மரியாதையாகவும் கூறி, இரண்டு பக்கங்களிலும் விலகி நிற்க, பூர்ணசந்திரோதயம் அந்த வாசலின் வழியாக உள்ளே நுழைந்து வலது பக்கம் திரும்பி இரண்டோரடி எடுத்து வைத்தாள். வெளியில் நின்ற தாதிகள் அந்தக் கதவை மறுபடியும் முன்போல மூடிக்கொண்டனர். உட்புறத்தில் விடப்பட்ட பூர்ண சந்திரோதயம் தனது உடம்பை மூடிக்கொண்டிருந்த பனாரிஸ் அங்கியை விலக்கி, எதிரில் காணப்பட்ட ஒரு நாற்காலியின் மீது வைத்து விட்டு வலது பக்கத்தில் நோக்கி இளவரசர் எங்கே இருக்கிறார் என்று பார்த்தாள். அவளது கண்பார்வை எட்டிய தூரம் வரையில் இளவரசர் இருந்ததாகவே தெரியவில்லை. அவள் ஒருவித வியப்பும் தி கைப்பும் அடைந்து நாற்புறங்களிலும் நோக்கினாள். அது நிரம்பவும் விசாலமானதும் மகா அலங்கார மானதுமான ஒரு ஹாலாக இருந்தது. எங்கு பார்த்தாலும் ஏராளமான மணிவிளக்குகள் சரம்சரமாகத் தொங்கிக் கொண்டி ருந்தன. ஆனால், அந்த ஹால் தான் அதற்குமுன் பார்த்தறியாத எத்தனையோ அலங்காரமான ஹால்களைப்போல் இல்லாமல், ஏதோ ஒரு புதுமையான ஹாலாகவும், அது மனிதலோகத்தைச் சேராமல், தெய்வ லோகத்தைச் சேர்ந்த அதி விநோதமான கொலு மண்டபம் போலவும் காணப்பட்டது. அந்த அழகிய பேடன்னம் கரைகடந்த பிரமிப்படைந்து, அந்த ஹாலின் அமைப்பில் என்ன விதமான புதுமை இருக்கிறது என்று கவனித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாள். அந்த மாடத்தின் சுவர்கள், நாற்காலிகள், மேஜைகள், கட்டில்கள், மெத்தைகள், தரைமுதலிய சகலமான இடங்களும், ஒரே கல்வெட்டு மயமாக நிறைந்திருந்தன. வெல் வெட்டுகள் பச்சை, சிவப்பு, ஊதா,