பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பூர்ணசந்திரோதயம்-2 நடக்கவேண்டியதைப் பற்றி யோசனை செய்து கொள்ளலாம் என்பது என்னுடைய எண்ணம். நான் வந்தவழி சிறிய சந்தாகவும், இருள் அடர்ந்ததாகவும் இருந்தது. அந்த வழியில் நான் சந்தித்த மனிதர்கள் தக்க கெளரவம் வாய்ந்த மனிதர் களாகக் காணப்படாமல், அழுக்கடைந்த அசங்கியமான தோற்றத் தோடு இருந்த கீழ்ச்சாதி மனிதர்களாகக் காணப்பட்டார்கள். அவர்களோடு பேசுவதற்கே எனக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும், என்னுடைய சங்கடமான நிலைமையை உத்தேசித்து நான்அவர்களோடு பேசியே தீரவேண்டியிருந்தது. நான் கேட்ட கேள்விக்குச் சிலர் துடுக்கான மறுமொழி சொன்னார்கள்; சிலர் என்னைப் பார்த்துப் புரளி செய்தார்கள். அதற்குமேல் நான் யாரோடும் பேசப் பிரியப்படாமல் மேலும் கொஞ்சதூரம் நடந்து வந்தேன். அப்போது எனக்குக் கிறுகிறுப்பும் மயக்கமும் உண்டாகவே, நான் அதற்குமேல் நடக்க முடியவில்லை. பக்கத்திலிருந்த ஒரு வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்தேன். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மனிதன் நான் இருந்த சங்கடமான நிலைமையைக் கண்டு என்னிடம் வந்து நிரம்பவும் அன்பாகப் பேசத் தொடங்கி நான் யார் என்பதையும் நான் அப்படிச் சோர்ந்திருக்க வேண்டிய காரணமென்ன என்பதையும் கேட்க, அவனது உருக்கமான சொல்லைக்கேட்ட நான் நிரம் பவும் சந்தோஷம் அடைந்து சோற்றுக் கடை எங்கே இருக்கிறது என்று நான் அவனிடம் விசாரிக்க, அவன் என்னை யோக்கியமான ஓரிடத்துக்கு அழைத்துக்கொண்டு போவதாகச் சொல்லி, என்னை அழைத்துக் கொண்டு சில சந்துகளையும் தெருக்களையும் கடந்து முன்னிலும் அதிக இருள் நிறைந்த ஒரு சந்திற்குள்ளிருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான். நான் அந்த வீட்டுக்குள் போய், கூடத்தில் இருந்த ஒரு விசிப்பலகையின் மேல் அப்பாடா என்று உட்கார்ந்து படுத்துக்கொண்டேன். அப்படி அந்தப் பலகையின் மேல் நான் படுத்ததே எனக்குச் சொர்க்க லோகமாகத் தோன்றியது. என்னை