பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 285 தயையும் ஏற்படும் என்பது நிச்சயம். அப்படிப்பட்ட பரோபகாரத்தைக் கருதி நான் நம்முடைய கலியாணத்தைக் கொஞ்சகாலத்துக்கு நிறுத்தி வைத்துவிட்டுப்போவதைப் பற்றி நீ என்மேல் கொஞ்சமும் ஆயாசப்பட மாட்டாய் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் வந்தவுடனே நம்முடைய கலியாணத்தை நிறைவேற்றிவிடலாம். அதுவரையில் உனக்கு ஆண் துணை வேண்டுமானால், என் வேலைக் காரி சில ஆள்களை அமர்த்தி, இரவு பகல் பங்களாவுக்குப் பக்கத்தில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கச் செய்வாள். உன்னுடைய செலவுக்குப் பணம் தேவையானால் என்னுடைய வேலைக்காரி உடனுக்குடன் கொடுப்பாள். நீ கொஞ்சமும் யோசனை செய்யாமல் உனக்குத் தேவையான உதவிகளை எல்லாம் என்னுடைய வேலைக்காரியைக் கொண்டு செய்து கொள்ளலாம். நான் உயிருக்குயிராக மதித்திருக்கும் பிரான சுந்தரியான உன்னை விட்டு ஒரு கூடிணம் பிரிவது என்னுடைய உயிரைப் பிரித்தெடுத்துக்கொண்டு போவதுபோல இருக்கிறது. ஆனாலும் விலக்க முடியாத ஒரு பெருத்த அசந்தர்ப்பத்தைக் கருதி நான் உன்னை விட்டுப் பிரிந்து போகிறேன். நான் திரும்பி வருகிறவரையில் நீ என்னை நினைத்துதுயரப்படாமல் உன் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டு இருந்து வர வேண்டும். மேலே நடக்கும் விஷயங்களைப் பற்றி நான் உனக்கு அடிக்கடி எழுதுகிறேன். இங்ங்னம் உன்னை ஒரு நொடியும் மறவாத, கலியாணசுந்தரம். - என்று எழுதப்பட்டிருந்த விரிவான கடிதத்தை ஷண்முக வடிவு படித்து முடிக்கவே, அவளது மனதில் சகிக்க முடியாத இன்பமும் துன்பமும் ஒரேகாலத்தில் எழுந்து அவளை வருத்தின. தனக்குப் புருஷன் ஆகப்போகும் யெளவனப் புருஷருடைய மேன்மைக் குணத்தையும் பரோபகாரச் சிந்தையையும் கண்டும், அவர் தூரதேசமான பூனாவிற்குப்