பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 பூர்ணசந்திரோதயம்-2 மஞ்சள், கறுப்பு, நீலம் முதலிய பலவகைப்பட்ட நிறங்களுடையனவாகவும் ஜரிகை வேலைப்பாடுகளும், ஜரிகைப் பூக்களும், புட்டாக்களும் நிரம்பியவையாகவும் இருந்தன. ஆதலால், அவைகள் ஒன்றுகூடி அவ்விடத்தில் இருந்த மணிவிளக்குகளின் பிரகாசத்தில் வானவில்லின் நிறங்களைக்காட்டிஜெகஜ்ஜோதியாகவும் மனமோகனஅற்புத சிருஷ்டியாகவும் காணப்பட்டன. பூர்ணசந்திரோதயம் பிரமித்து மதிமயங்கி ஆச்சரிய வசத்தளாய், அங்குமிங்கும் சென்று, இளவரசர் எங்கே இருக்கிறார் என்று உற்று நோக்கியதோடு அந்த ஹாலின் புதுமையான அமைப்பையும் கூர்ந்து நோக்கினாள். அவள் கீழே நடந்தாலும், சுவர்களில் சாய்ந்தாலும், நாற்காலியில் உட்கார்ந்தாலும், எல்லா இடங்களும் அவளை இனிமையாக வழுக்கிவிட்டு அவளைப் பரமானந்த சுகத்தில் ஆழ்த்தின. அந்த அமைப்போடு, எங்கு பார்த்தாலும், வாசனைப் புஷ்பங்கள் மலர்ந்து குலுங்கி நின்ற பூத்தொட்டிகளும், நிலைக் கண்ணாடிகளும், ஸோபாக்களும், தந்தத்தினால் ஆன சாய்வான நாற்காலிகள் முதலிய விநோதப் பொருட்களும் நிறைந்து அது தேவேந்திரனது வலந்த மண்டபமோ வென ஐயமுறச்செய்து பஞ் சேந்திரி யங்களும் மயங்கிப் போதையில் ஆழ்ந்து போம்படி செய்தன. அப்படிப்பட்ட வைபவங்களைக்கண்ட பூர்ண சந்திரோதயம் நிலை கலங்கி ஆனந்தபரவசம் அடைந்தவளாப், ஒரிடம் விடாமல் அந்த ஹால் முழுதையும் பார்த்தவண்ணம் இளவரசர் எங்கே இருக்கிறார் என்று உற்று நோக்கிக் கொண்டே சென்றாள். ஆனால், அந்த ஹாலில் எந்த இடத்திலும் இளவரசராவது, வேறே மனிதராவது தாதிகளாவது காணப்படாமல் அது நிர்மானுஷ்யமாக இருந்தது. அதைக்கண்ட பூர்ணசந்திரோதயத்தின் மனம் அளவற்ற சஞ்சலம் அடைந்து பலவகையில் சிந்தனை செய்யத் தொடங்கியது. அவ்விடத்தில் தனது வருகையை எதிர்பார்த்திருந்த இளவரசர் ஒருகால் ஏதேனும் அவசர காரியமாக எங்கேயாகிலும் போயிருந்து