பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 - பூர்ணசந்திரோதயம்-2 போய் லலிதகுமாரி தேவியைக் காப்பாற்றப் போவதைப் பற்றியும் அவள் அளவற்ற சந் தோஷம் அடைந்தாள்.ஆனாலும், அவர் திரும்பி வருகிற வரையில் தான் அவரைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற விசனம் இடையிடையே தோன்றி அந்த சந்தோஷத்தைக் குறைத்தது. அப்படிப்பட்ட மகா பரிசுத்தமான மனமுடைய அந்தப் புண்ணிய புருஷரைப் பற்றி தான் முதல் கடிதம் வந்தவுடன் தவறாக நினைத்ததைப் பற்றி ஷண்முகவடிவு நிரம் பவும் இரங்கித் தன்னைத்தானே கண்டித்துக் கொண்டவளாய்த் தனக்கு எதிரில் அழகே வடிவாக நின்று கொண்டிருந்த சிவபாக்கியத்தை அன்பாகப் பார்த்து, அவளைத் தனக்குப் பக்கத்தில் ஊஞ்சற் பலகையின் மேல் உட்கார்ந்து கொள்ளச்செய்து, அவளுக்கு நேர்ந்ததுன்பங்களைப் பற்றி அநுதாப மொழிகள் கூறி, அவளது மேன்மைக் குணத்தைப் பற்றிப் பலவாறு புகழ்ந்தாள். அதன் பிறகு ஷண்முக வடிவு இரண்டொரு நாழிகை நேரம் வரையில் அவ்விடத்திலிருந்து அவளோடும் வேலைக்காரியோடும் பேசிக்கொண்டிருந்து, அடிக்கடி தனது பங்களாவிற்கு அவர்கள் வரும்படி அவர்களிடம் சொல்லி விட்டு, அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுத் தனது ஜாகையை நோக்கிச் சென்றாள். 女 இங்ங்ணம் நிலைமை இப்படி இருக்க, அம்மன்பேட்டையை விட்டுப் பிரயாணம் புறப்பட்டு செஞ்சிக் கோட்டையை நோக்கிச் சென்ற அன்னத்தம்மாளினது பெண்களை நாம் கவனிப்போம். சிவபாக்கியம் என்னும் யெளவனப் பெண் தனது வீட்டைவிட்டு ரகசியமாக ஒடிப்போன பிறகு இரண்டு நாழிகை சாவகாசம் கழிந்தது. உடனே அன்னத்தம்மாளும், அவளது பெண்களான அம்மாளு, தனம், அபிராமி ஆகிய மூவரும் எழுந்து பிரயாணத்துக்குத் தயாரர்யினர். சிவபாக்கியம் அப்போதும் தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்று நினைத்த அன்னத்தம்மாள் அவளது படுக்கையண்டை போய்ப் பார்க்க,