பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/302

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


288 பூர்ணசந்திரோதயம்-2 என்பவளையும் அவர்களுடன் கூட அனுப்ப ஏற்பாடு செய்திருந்தாள். ஆகவே, அன்னத்தம் மாளின் மூன்று பெண்களும் முத்துலக்ஷ்மி அம்மாளும் பெட்டிவண்டியில் உட்கார்ந்து கொண்டனர். பெட்டி வண்டியும் சாமான் வண்டிகளும் சரியான காலத்தில் பிரயாணம் புறப்பட்டு செஞ்சிக்கோட்டைக்குப்போகும் ராஜபாட்டையின் வழியாகச் செல்லத் தொடங்கின. அன்னத்தம் மாளினது தங்கையான முத்துலக்ஷ்மியம்மாளுக்கு வயது சுமார் நாற்பது இருக்கலாம். அவளும் பாலியத்தில் நல்ல அழகும் வசீகரமும் நிரம்பப் பெற்றவளாக இருந்தவள் ஆதலால், அப்போதும் அவள் கட்டுத்தளராத மினுமினுப்பான உடம்பை உடையவளாகவே இருந்தாள். ஆனாலும், அவளது ஒவ்வோர்.அங்கமும் செழித்துக் கொழுத்து அவள் யெளவனப் பருவத்தைக் கடந்து நடுத்தரப் பிராயமடைந்த முதிர்ந்த ஸ்திரீயென்பதைக் காட்டியது; தொந்தி தொப்பை முதலிய பெரிய மனிதச் சின்னமும் அவளிடம் காணப்பட்டது. கிராமங்களில் நடைபெறும் வள்ளியம்மை நாடகத்தில் வள்ளிவேஷம் போட்டு நடிப்பதில் அவள் மகா அரிய திறமை வாய்ந்தவள். தம் புராவை வைத்துக்கொண்டு வாய்ப்பாட்டுப் பாடுவதில் அவள் நிரம்பவும் சாமர்த்தியசாலி. யெளவனப் பருவத்தினரான பெரிய மனிதர்களை மயக்கிப் பணம் பறிப்பதில் குள்ளநரியைக் காட்டிலும் அதிக தந்திரம் வாய்ந்தவள். பக்கத்தில் இருக்கும் ஆண் பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவர்களுக்குத் தெரியாமல் மூக்குப் பொடி போடுவதில் வில்லாதி வில்லி. தம்மிடம் உள்ள சொத்துக்களை எல்லாம் இழந்துவிட்ட தனது காதலர்களை ஜவ்வாதில் மயிர் கொடுத்து வாங்குவதுபோல விலக்கிக் கழுவி விடுவதில் எமகாதகி. அவள் அப்படிப்பட்ட நிகரற்ற சிறப்புகள் வாய்ந்த வளாக இருந்தும், அவளால் தேடப்படும் பொருட்கள் நிலைத்து நிற்காமல் ஏதோ ஒரு வழியாகப் போய்க் கொண்டிருந்தமையால், அவள் எப்போதும் தரித்திர