பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 291 வேண்டிய சாப்பாட்டு செளகரியங்களை எல்லாம் செய்துகொடுத்து அவர்களுக்கு வேண்டிய வண்டிகளையும் அனுப்பும் படி சத்திரத்து மணியக்காரருக்குக் கட்டளை பிறப்பிக்க, அவர் உடனே சத்திரத்திற்கு வந்து, இவர்களுக்கு உபசரணை புரிந்து சகலமான வசதிகளையும் செய்து கொடுத்தார். அம்மாளு முதலியோர் அந்த ஊருக்குப் போனது செவ்வாய் கிழமை சாயுங்காலம். அந்த ராஜா சத்திரத்தில் இருந்தது அவர்களுக்குச் சொர்க்க போகம் போல இருந்ததாகையால், அவ்விடத்தை விட்டு உடனே போய்விட அவர்கள் விரும்பவில்லை. ஆகையால், அந்த ஊரில் புதன், வியாழன், வெள்ளி, சனி வரையில் இருந்து ஞாயிற்றுக் கிழமை காலையில் பிரயாணம் புறப்பட்டு மேலே போக வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்துக்கொண்டு அவ்விடத்தில் தினந்தினம் விருந்துண்டு களிப்படைந்து குதுகலமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். நிலைமை அவ்வாறு இருக்க, அவர்கள் தஞ்சையிலிருந்து புறப்பட்டதற்குச் சில தினங்களுக்குப் பிறகு நமது கலியான சுந்தரம் தஞ்சையிலிருந்து புறப்பட்டு செஞ்சிக்கோட்டை மார்க்கமாக வந்தார் அல்லவா. அவனும் வழியிலுள்ள சத்திரங்களில் தங்கி அதற்கு முன்போன பிரயாணிகளைப் பற்றி விசாரணை செய்துகொண்டு, அவர்களைப் பிடிக்க வேண்டும் என்ற கருத்தோடு தனது வண்டியை விரைவாக ஒட்டிக்கொண்டு வந்து சனிக்கிழமை சாயுங்காலம் செஞ்சிக் கோட்டையை அடைந்து, அம்மாளு முதலிய தாதிப் பெண்கள் தங்கியிருந்த ராஜா சத்திரத்திலேயே வந்து இறங்கி, அவ்விடத்தில் பிரயாணிக்களுக்காக விடப்பட்டிருந்த விடுதியொன்றில் தங்கினான். அவன் தஞ்சையில் சிவ பாக்கியத்தினிடம் சம்பாவித்த காலத்தில், அவளது தாய்க்கும் சகோதரிகளுக்கும் எவ்வித துன்பமாவது அவமானமாவது நேராமல், தான் அவர்களது சதி ஆலோசனையைத் தடுப்பதாக