பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பூர்ணசந்திரோதயம்-2 அவளுக்கு வாக்குறுதி செய்து கொடுத்தது தெரிந்த விஷயம். ஆகையால், அவன் தஞ்சையிலிருந்து செஞ்சிக் கோட்டைக்குப் பிரயாணம் செய்த காலத்தில் இரவு பகல் அதே நினைவாகவும் கவலையாகவும் இருந்து அந்த விஷயத்தில்தான் எப்படி வேலை செய்வது என்பதைப் பற்றியும் பலவாறு யோசனை செய்து கொண்டே வந்தான். அந்தப் பெண்களைத் தான் கண்டு, அவர்களிடம் நயமாகவே பேசி, புத்திமதிகள் கூறி, அவர்களது மனதை மாற்றி, அவர்கள் தாமாகவே அந்தச் சதியாலோசனையை நிறைவேற்றாமல் திரும்பிப் போய்விடும் படி செய்வதே எல்லாவற்றிலும் சர்வ சிலாக்கியமான காரியமாக அவனுக்குத் தோன்றியது. ஆகையால், அவன் வெகு சீக்கிரமாகப் பிரயாணம் செய்து, அவர்கள் இருந்த இடத்தை அடைந்து தந்திரமாக அவர்களது பழக்கத்தைச் சம்பாதித்துக் கொண்டு அவர்களோடு தானும் சகப் பிரயாணியாகப் போவதென்றும் அதற்குமேல் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி தான் நடந்து அவர்களது மனதை மாற்ற மெதுவாக முயலுவது என்றும் அவன் தீர்மானித்துக் கொண்டு வந்து அவர்கள் இருந்த சத்திரத்திலேயே இறங்கி யிருந்தான். அந்தப் பெண்கள் பூனா தேசம் போகிற வரையில் தானும் அவர்களுடன் கூடவே போய், தன்னால் இயன்ற தந்திரங்களையெல்லாம் செய்து சாம தான பேத தண்டமான சதுர்வித உபாயங்களையும் உபயோகித்து அந்தப் பெண்களினது மனதை மாற்ற முயல வேண்டும் என்றும், அத்தனைக்கும் அவர்கள் வழிக்கு வராவிட்டால், இளவரசியான லலிதகுமாரிதேவியை எச்சரித்து, அவள் எப்போதும் விழிப்பாக இருக்கும் படி செய்ய வேண்டும் என்றும், நமது யெளவன வீரன் உறுதியாக எண்ணிக் கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் பூனாவுக்குப் போகும் பிரயாணிகள் செஞ்சிக் கோட்டையிலிருந்து புறப்பட்டு, முறையே சந்தூர்க் கோட்டை, கோலாப்பூர்கோட்டை, சத்தாராகோட்டை முதலிய