பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 295 பிரியமும் மதிப்பும் ஏற்பட்டுப் போயிருந்தன. எந்த விஷயத்தையும் அவர்கள் அவரது யோசனைப் படியே செய்து வந்தனர். அவர்கலியாணசுந்தரத்தினிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு, அந்தப் பெண்களிடம் போன சமயம் அவர்கள் இராப் போஜனத்துக்கு உட்கார வேண்டிய சமயமாதலால், மணியக்காரர் போனவுடனே சமையற்காரர்கள் அந்த ஸ்திரீகள் நால்வருக்கும் இலைகள் போட்டுப் பரிமாறத் தொடங்கினர். ஒவ்வொரு சாப்பாட்டு வேளையிலும், மணியக்காரர் கூட இருந்து, அவர்களுக்கு சரியானபடி சாப்பாடு போடப்படுகிறதா என்று மேற்பார்வை பார்ப்பது வழக்கம். ஆதலால், அதுபோல, அவர் அவர்களுக்கு எதிரில் நின்று பேச்சுக் கொடுத்தார். மறுநாள் காலையில் அவர்கள் பிரயாணம் போகவேண்டியதன் சம்பந்தமான வார்த்தைகளை அவர்கள் அப்போது பேசிக் கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் சரியாக ஒன்பது மணிக்குத் தாங்கள் புறப்படவேண்டுமென்றும், அதற்குத் தகுந்தபடி வண்டிகள் ஆயத்தமாகி இருக்க வேண்டும் என்றும் முத்துலக மி மணியக்காரரிடம் தெரிவித்தாள். அப்படியே செய்வதாக மணியக்காரர் ஒப்புக்கொண்டார். பிறகு, தாங்கள் போகும் ரஸ்தா மேடு பள்ளம் உடைப்பு முதலியவை இல்லாமல் இருக்குமோ என்றும், மழை பெய்யுமோ என்றும், வழியில் தங்குவதற்கு எந்த இடத்தில் சத்திரங்கள் இருக்கும் என்றும், போகும் மார்க்கத்தில் திருடர்களின் பயமிருக்குமோ என்றும் அவள் மணியக்காரரிடம் கேள்விகள் கேட்க, அவர் அவளது கடைசிக் கேள்வியைத் தவிர, மற்றவைகளுக்கு எல்லாம், திருப்திகரமான மறுமொழி கூறினார். திருடரது பயம் உண்டோ வென்று அவள் கேட்ட கேள்விக்கு அவர் மறுமொழி சொல்லும் போது சிறிது தயங்கிக் களைத்துத் தலையைச் சொறிந்துகொண்டு மெதுவாகப் பேசத் தொடங்கி, 'திருடர் விஷயத்தில்தான் எனக்கு நிரம் பவும் கவலையாக இருக்கிறது. இந்த ரஸ்தாவில் சில பயங்கரமான இடங்கள் இருக்கின்றன. அவ்விடத்தில் பகலில் கூட திருடர்கள்