பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


296 - பூர்ணசந்திரோதயம்-2 வழிமறித்துப் பிரயாணிகளை உபத்திரவித்ததாக இப்போது சமீபகாலத்தில்கூட நான் கேள்வியுற்றேன். நீங்களோ பெட்டி வண்டியில் போகப்போகிறீர்கள். அதற்குப் பூட்ட உத்தரவாகி இருக்கிற குதிரைகள் நல்ல உயர்ந்த ஜாதிக் குதிரைகள்; வண்டிக்காரன் எவ்வளவுதான் அவைகளை அடக்கி மெதுவாக ஒட்டினாலும், அவைகள் விசையாகவே ஒடும். உங்களுடைய சாமான்வண்டிகளுக்குப்பூட்டப்படும் மாடுகளும் உயர்ந்த ஜாதி மாடுகள்தான். இருந்தாலும் உங்களுடைய பெட்டி வண்டி வெகுதுரம் முன்னாலேதான் போய்க் கொண்டிருக்கும். மூன்று வண்டிகளையும் கூடவே ஒட்டிக் கொண்டுபோக வண்டிக் காரர்கள் எவ்வளவு தூரம் பிரயாசைப்பட் டாலும், அது பலிக்காது. உங்களுடைய பெட்டிவண்டி அரைமயில் துர மாவது முன்னாலேதான் இருக்கும். நீங்கள் நாலுபேரும் பெண் பிள்ளைகள். உங்களைத் தவிர வண்டிக்காரன் ஒருத்தனே உங்களோடுகூட இருக்கப் போகிறான். அவனோடு பலசாலியும், திடசாலியுமான இன்னம் ஒரு மனிதர் ஆயுத பாணியாக உங்களோடுகூட இருந்தாலும், அது போதுமான பக்கபலமாக இருக்கும். திருடர்கள் வந்தாலும் கவலை யில்லை" என்றார். அவ்வாறு அவர் சொன்ன எச்சரிப்பு மொழியைக் கேட்க, அந்த நான்கு பெண்பாலாரும் பெருத்த திகிலும் கவலையும் அப்போதே கொண்டனர். உடனே அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அபிப்பிராயங்களைச் சொல்லலாயினர். முத்துலக்ஷ்மியம்மாள், தாங்கள் பெட்டிவண்டியில் போவதை விட இன்னொரு மாட்டுவண்டியில் போவது நல்லது என்றாள். அம்மாளு, தாங்கள் அவ்வளவு தூரம் மாட்டு வண்டியில் போனால் உடம்பு அதிர்ந்து போகுமாதலால், பெட்டி வண்டியில் போவதே தகுதியானது என்றாள். தனம், முத்துலக மியம்மாள் சொன்னதே சரியான யோசனை என்று அதை ஆமோதித்தாள். மூன்றாவது சகோதரியான