பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 297 அபிராமி என்பவள், யாராவது தக்க ஆண்பிள்ளை ஒருவர் கத்தி துப்பாக்கி முதலிய ஆயுதங்களோடு தங்களுடன் பிரயாணம் செய்தால், தாங்கள் பெட்டிவண்டியிலேயே போகலாம் என்றாள். அவர்களது அபிப்பிராயங்களை எல்லாம் கேட்டுக்கொண்டு ஏதோ சிந்தனை செய்பவர் போலச் சிறிது நேரம் மெளனம் சாதித்த மணியக்காரர், 'எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இதே சத்திரத்தில் இன்று சாயுங்க்ாலம் வந்து இறங்கிய ஒரு பிரயாணி இருக்கிறார். அவரிடத்தில் நான் கொஞ்ச நேரத்துக்கு முன் பேசிக் கொண்டிருந்த காலத்தில், அவரும் இதே வழியாகப் பிரயாணம் செய்ய வேண்டுமாதலால், தமக்குப் பிரத்தியேகமான ஒரு வண்டி வேண்டும் என்று சொன்னதன்றி, ஏதோ அவசரகாரியமாகப் போகவேண்டுமாகையால், நாளைய தினம் காலையிலேயே போக வேண்டும் என்றும் சொன்னார். நான் அப்படியே அவருக்குப் பிரத்தியேகமான ஒரு வண்டி அமர்த்திக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்துவிட்டு வந்தேன். அந்த மனிதர் தனியாகவே வந்திருக்கிறார். அவர் தக்க பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைபோல இருக்கிறார். பார்ப்பதற்கு அழகாகவும் யெளவனப் பருவத்தினராகவும் இருக்கிறார். அவரும் தஞ்சாவூரிலிருந்து தான் வருகிறாராம். அவர் நம்முடைய பெட்டிவண்டியில் உட்கார்ந்து வர ஒப்புக் கொள்வாரானால், எல்லாம் செளகரியமாகிக் போகும் என்றார். கலியாணசுந்தரத்தைப் பற்றி அவ்வளவு தூரம் புகழ்ச்சியாக மணியக்காரர் பேசியதைக் கேட்ட உடனே, அந்த யெளவனச் சிறுமியர் மூவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்ததன்றி, அந்த யெளவனப் புருஷரை எப்படியாவது தங்களுக்குத் துணையாக அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்று விரும்பினர். அபிராமி என்பவள் தங்களுடைய சொந்த ஊர் மனிதரைத் தாங்கள் பெட்டி வண்டியில் வைத்துக் கொண்டு போவதில்