பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 299 கொண்ட மணியக்காரர், மறுநாள் காலையில் தான் மறுபடியும் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டுப்போய் அந்தச்சங்கதியைப் பெண்டீர் நால்வரிடத்திலும் தெரிவித்துவிட்டுப் போய்விட்டார். தான் மறுநாட் காலை அந்தத் தாதிப் பெண்களோடு கூடத் தனிமையில் பிரயாணம் செய்யப் போவதைப் பற்றி ஒருவகையான மன எழுச்சியும், அவர்களோடு தான் எப்படிப் பேசி அவர்களது மனதை மாற்றுவது என்பதைப் பற்றிய கவலையும் கொண்டவனாய், கலியாணசுந்தரம் நெடுநேரம் வரையில் தூங்காமலேயே விழித்துப் புரண்டு கொண்டிருந்தான். தனது ஆருயிர்க் காதலியான ஷண்முகவடிவினது இனிய சுந்தர வடிவமும், அவளைப் பற்றிய நினைவும் அடிக்கடி அவனது மனதில் தோன்றி அவனை இன்பசாகரத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. அவ்வாறு அவன் நெடுநேரம் வரையில் தூங்காமலிருந்து கடைசியில் துயிலில் ஆழ்ந்தான். முத்துலக மி அம்மாளும், இளம் பெண்கள் மூவரும் தங்களது மனதிற்கு உகந்த ஒரு சகாப் பிரயாணி தெய்வச் செயலாக வந்து வாய்த்ததைக் குறித்து மிகுந்த களிகொண்டவர்களாய் நெடுநேரம் வரையில் சந்தோஷமாக சம்பாஷித்திருந்து அதன் பிறகு சயனங்களை அடைந்துதுயின்று அந்த இரவைக் கழித்தனர். மறுநாள் காலையில் எல்லோரும் எழுந்து தத்தமது காலைக் கடன்களை முடித்துக்கொண்டு போஜனத்துக்கு ஆயத்தமாயினர். அந்தச் சமயத்தில் மணியக்காரர் கலியான சுந்தரம் இருந்த விடுதிக்கு வந்து, 'ஐயா இந்தச் சத்திரத்தில் சாதாரணமாக வரும் எல்லாப் பிரயாணிகளுக்கும் வேறாகச் சமையல் செய்யப்படுகிறது. அவ்விடத்திலிருந்துதான் நீங்கள் சாப்பிட வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும். இந்தத் தாதிப் பெண்கள் ஒன்பது மணிக்குப் பிரயாணம் புறப்பட வேண்டும் என்பதைக் கருதி அவர்களுக்குப் பிரத்தியேகமான சாப்பாடு தயாராகிவிட்டது. அவ்விடத்திலேயே நீங்களும்