பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SOO - பூர்ணசந்திரோதயம்-2 சாப்பிடும் படி நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். அந்தப் பெண்களும் அதற்கு இணங்கிவிட்டபடியால், நீங்கள் அங்கேயே சாப்பிடலாம்; வாருங்கள்' என்றார். அதைக் கேட்ட கலியாணசுந்தரம் ஒருவிதக் கிலேசம் அடைந்தாலும், தான்.அந்தப் பெண்களிடத்தில் எப்படியாவது பழகி நட்புச் செய்துகொண்டுதான் தீரவேண்டும் என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டவனாய், அதற்கு இணங்கி, உடனே புறப்பட்டு மணியக்காரரோடு போனான். அவன் அந்தப் பெண்கள் இறங்கி இருந்த இடத்திற்குப் போய் அப்போதே அவர்களைக் கண்டான். அது போலவே அந்தப் பெண்களும் கலியாணசுந்தரத்தை உற்றுப் பார்த்தனர். கந்தருவ ஸ்திரீகள் போலவும், சித்திரப் பதுமைகள் போலவும் அற்புதமான கட்டழகோடு விளங்கிய அந்தப் பெண்கள் மூவரையும் பார்த்தவுடனே நமது யெளவனச்சிறுவனது மனதில் அளவற்ற இரக்கமும் ஆத்திரமும் உண்டாயின. அவ்வளவு வசீகரமான அழகும் யெளவனப் பருவமும் வாய்ந்த அந்தப் பெண்கள் அப்படிப்பட்ட படுமோசமான சதியாலோசனை களில் சம்பந்தப்பட்டிருப்பதைக் காண அவனது மனம் தவித்தது. அவர்கள் தாங்களாகவே அப்படிப்பட்ட மோசடியில் இறங்கக் கூடியவர்களல்ல என்றும், அவர்களது தாயான அன்னத்தம் மாளினது கொடுங்கோன்மையினாலும், வற்புறுத்தலினாலுமே அவர்கள் அப்படிப்பட்ட துன் மார்க்கத்தில் இறங்கியிருக்கி றார்கள் என்றும் அவன் உறுதியாக நம்பினான். ஆகையால், தான் தக்கபடி அவர்களுக்கு நற்புத்தி புகட்டி அவர்களது மனதை மாற்றினால், அவர்கள் அந்தச் சதியாலோசனையிலிருந்து விலகிக் கொள்வதோடு அதன் பிறகு எப்போதும் நல்ல வழியிலேயே நடப்பார்கள் என்ற நம்பிக்கை அவனது மனத்தில் உண்டாயிற்று. அவன் அவ்விடத்திற்கு வந்தவுடனே அந்தப் பெண்டீர் நால்வரும் நாணிக்கோணி அவனிடம் மரியாதை பாராட்டி ஒரு பக்கமாக விலகி நின்றனர். இளநங்கையர்