பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பூர்ணசந்திரோதயம்-2 முகத்தின் வசீகரமும் நடத்தையின் மேன்மையும் சொற்களின் மாதுரியமும் அறிவின் கூர்மையும் ஒன்றுகூடி எப்போதும் குதுகலமாக இருக்கும் தன்மையுடைய அந்த மூன்று பெண்களினது மனதையும், எப்படிப்பட்டவர்களையும் ஏமாற்றிக் கைகண்டவளான முத்துலக்ஷ்மியினது மனதையும் வெகுசீக்கிரத்தில் கவர்ந்தது அபூர்வமான விஷயமல்ல. ஆகையால், அவனது துணையை அவர்கள் நிரம்பவும் அன்பாகவும் அந்தரங்கமான பிரியத்தோடும் ஏற்றுக் கொண்டனர். - அவன் போனவுடனே மணியக்காரர் அவனுக்குச் சம்பிரமமான போஜனம் செய்வித்தார். அதன்பிறகு அந்தப் பெண்டீர் நால் வரும் தங்களது போஜனத்தை முடித்துக் கொண்டனர். சரியாக ஒன்பது மணிக்குப் பிரயாணம் புறப்பட வேண்டியதைக் கருதி அவர்கள் எல்லோரும் விரைவாகவே சாப்பாட்டை முடித்துக் கொண்டனர். ஆனாலும், அந்த போஜனம் நிறைவேறுவதற்குள் அந்த நான்கு பெண்டீரும் கலியான சுந்தரத்தோடு வருஷக்கணக்கில் பழகி சிநேகமாக இருந்தவர்கள் போல நிரம் பவும் தாராளமாகவும் அன்னியோன்னியமாகவும் பேசத் தொடங்கிவிட்டனர். கேவலம் தாசி வகுப்பைச் சேர்ந்த ஸ்திரீகளோடு தான் அப்படி நெருங்கிப் பழகுவது கலியாண சுந்தரத்துக்கு முற்றிலும் லஜ்ஜையாகவும் அருவருப்பாகவும் இருந்ததது. ஆனாலும், தான் எண்ணி வந்த கருத்தை நிறைவேற்றிக் கொள்ள அது அனுகூலமானதென்று நினைத்து, அவனும் அவர்களிடத்தில் தாராளமாகவும் நெடுங்காலம் பழகினவன் போலவும் நடந்து வந்தான். சிறிது நேரம் கழிய, அவர்கள் புறப்பட வேண்டிய காலம் நெருங்கியது. அவர்களது பாத்திரங்கள் சாமான்கள் முதலியவைகளெல்லாம் மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்டன. அந்த விஷயத்தில் கலியான சுந்தரம் அதிக சிரத்தை பாராட்டி எல்லா ஏற்பாடுகளையும் நேரிலிருந்து மேற் பார்வை