பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/317

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் SO3 பார்த்துவந்தான். ஆகையால், அந்தப் பெண்களுடைய பொறுப்பும் பிரயாசையும் கொஞ்சம் குறைந்தன. அதனாலும், அவர்கள் அவனிடம் வைத்த மதிப்பும் பிரியமும் அதிகரித்தன. மாட்டுவண்டிகளில் சாமான்களெல்லாம் ஏற்றப்பட்டபிறகு, பெட்டிவண்டி ஆயத்தமாக வந்து நின்றது. பழைய காலத்துப் பெட்டிவண்டி இந்த காலத்துப் பெட்டிவண்டியை விட அதிக இடமும் வசதியும் உடையதாக இருந்தது. ஆகையால், அவர்களுக்காக அனுப்பப்பட்ட வண்டியின் உட்புறத்தில் ஒருவரையொருவர் அதிகமாக நெருக்காமல் ஆறு பேர் உட்கார இடம் இருந்தது. ஆகையால், அவர்கள் ஐவருக்கும் அது போதுமானதாக இருந்தது. அந்த வண்டிக்குள் மும்மூன்று பேர் வரிசையாக உட்காரத்தக்க மெத்தைகள் தைக்கப்பட்ட இரண்டு பலகைகள் முன்னும் பின்னுமாக இருந்தன. பின்பலகையின் மீது முத்துலக மியம்மாளும், அபிராமி என்ற கடைசி சகோதரியும் உட்கார்ந்துகொண்டனர். முன் ஆசனத்தில் கலியாணசுந்தரம் உட்கார்ந்து கொண்டான். அம்மாளு, தனம் என்ற இரண்டு மூத்த சகோதரிகளும் ஒரத்தில் உட்கார்ந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லி, இரண்டு பக்கத்துக் கதவுகளினண்டையிலும் உட்கார்ந்துகொண்டனர். ஆகையால், கலியாணசுந்தரம் அவர்கள் இருவருக்கும் நடுவில் உங்கார்ந்து கொள்ள நேர்ந்தது. அவனுக்கு வலது பக்கத்தில் மூத்த பெண்ணான அம்மாளுவும் இடது பக்கத்தில் இரண்டாவது பெண்ணான தனமும் உட்கார்ந்து கொண்டனர். மகா அற்புதமான அழகும் வசீகரத் தன்மையும் நிறைந்த அந்த யெளவன மடந்தையருக்கு இடையிலிருந்து அவன் பிரயாணம் செய்ய எத்தனித்தான். ஆனாலும், அவனது மனம் கொஞ்சமாகிலும் சபலிக்காமலே இருந்தது அன்றி, நெடுந்துாரத்துக்கு அப்பால் இருந்த ஷண்முகவடிவின் நினைவும் வடிவமும் நிறைந்ததாகவே இருந்து வந்தது. g.é.H-20