பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/318

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


304 - பூர்ணசந்திரோதயம்-2 ஷண்முகவடிவினது விஷயத்தில் தான் இரண்டகம் செய்து, அபரிசுத்தனாக நடக்கும்படி தன் மனம் ஒருநாளும் தன்னைத் தூண்டாது என்ற நிச்சயமும் அவனது மனதில் இருந்து வந்தது. லலிதகுமாரி தேவிக்கு நேர இருந்த பெருத்த அபாயத்தை விலக்க வேண்டும் என்ற பரோபகார எண்ணத் தோடு தான் வந்திருப்பதால், அதைக் கருதித் தான் அவர்களோடு அப்படி அன்னியோன்னியமாகப் பழகியே தீரவேண்டும் என்ற ஒரு கட்டாயத்தினால் அவன் அப்படிப்பட்ட இழிவிற்கு உடன்பட்டானே அன்றி, அவன் இயற்கையில் அன்னிய மாதரை முற்றிலும் விஷமென வெறுக்கும் ஏக பத்தினி விரதத்தை உறுதியாகக் கடைப்பிடித்தவனே. மகா உன்னதமாக இருந்த இரட்டைக் குதிரைகள் பூட்டப்பெற்ற அந்தப் பெட்டிவண்டி சத்திரத்தை விட்டுப் புறப்பட்டது. அதற்குப் பிறகு சாமான் வண்டிகளும் புறப்பட்டன. ஆனாலும், முதல்நாள் இரவு மணியக்காரர் கூறியபடி, அரைநாழிகை சாவகாசத்திற்குள் பெட்டிவண்டி விரைவாக முன்னால் போய், மாட்டுவண்டிகள் பார்க்கமுடியாதபடி அதிக தூரம் போய் விட்டது. பெட்டிவண்டிக்குள் இருந்தவர்கள் சிறிது நேரம் வரையில் மெளனமாக இருந்தனர். தாங்கள் அன்றைய பகல் முழுவதும் பிரயாணம் செய்யவேண்டி இருந்தது. ஆகையால், ஏதாவது விஷயத்தைப்பற்றி தமாஷாகப் பேசிக் கொண்டு போனால் அன்றி அந்தப் பிரயாணம் நிரம் பவும் கடினமாக இருக்கும் என்று நினைத்த முத்துலக்ஷமியம்மாள் கலியான சுந்தரத் தோடு மெதுவாகப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கியதன்றி, தாங்கள் எவ்விடத்துக்கு என்ன கருத்தோடு போகிறார்கள் என்பதை அப்போதாவது தாங்கள் அவனிடம் வெளியிடுவதுதான் உசிதம் என்று நினைத்து, தனது அக்காளினது புத்திகரிகளான அந்தப்பெண்கள் மூவரும், பூனா தேசத்திலுள்ள தஞ்சை இளவரசியான லலிதகுமாரி தேவியினிடம் வேலைக்கு அமரப்போகிறார்கள் என்றும், தான் அவர்களுக்குத் துணையாகப் போவதாகவும் கூறினாள்.